Honda Activa 125: இந்தியாவின் இரு சக்கர வாகனத் துறையில், தற்போது பைக்குகளுடன் ஸ்கூட்டர்களுக்கான தேவையும் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதில் ஜப்பானின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர், நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் அதிக விற்பனைப் பார்த்து, ஆக்டிவா வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனம் ஒரு கவர்ச்சிகரமான சலுகையை வழங்கியுள்ளது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டராய் வாங்கினால் 5 சதவீத கேஷ்பேக் சலுகையை (Cashback Discounts) நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் இந்த சலுகை ஆக்டிவா 125 வாகனத்துக்கு பொருந்தும். எனவே தாமதப்படுத்த வேண்டாம். இந்த ஸ்கூட்டர் கேஷ்பேக் சலுகை அறிவித்திருந்தாலும், அதற்கு முன், இந்த ஸ்கூட்டரின் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
ALSO READ | ரூ .18,000 வரை மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் Electric Scooters
ஆக்டிவா 125 விவரங்கள்:
ஹோண்டா நிறுவனம், இந்த ஆக்டிவா 125 ஸ்கூட்டரை மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் (Standard), அலாய் (Alloy) மற்றும் டீலக்ஸ் (Deluxe) ஆகியவை அடங்கும். ஏர்-கூல்ட் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஸ்கூட்டரில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 124 சிசி திறனை வழங்கும் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த எஞ்சின் 8.29 பிஎஸ் சக்தியையும் 10.3 என்எம் டார்க்கையும் உருவாக்க முடியும். அதன் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் உள்ளது, பின்புற சக்கரத்தில் டிரம் பிரேக் உள்ளது. இந்த ஆக்டிவாவில் 5.3 லிட்டர் அளவு கொண்ட எரிபொருள் தொட்டி உள்ளது.
இந்த ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் மைலேஜ் பற்றி பேசுகையில், நிறுவனம் 60 கி.மீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது என்று கூறுகிறது. இந்த ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூ .71,674. அதுவே இதன் டாப் மாடல் ரூ .78,797 வரை உள்ளது.
ALSO READ | Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!
கேஷ்பேக் சலுகை:
ஹோண்டா ஆக்டிவா 125 இல் கிடைக்கும் கேஷ்பேக் சலுகை என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். சுமார் 3500 ரூபாயாக இருக்கும் இந்த ஆக்டிவாவில் ஹோண்டா 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கியுள்ளது.
ஆனால் இந்த கேஷ்பேக்கின் நன்மை பெற வேண்டும் என்றால், இந்த ஸ்கூட்டரின் ஈ.எம்.ஐ யை தங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதாவது எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டில் (Credit Card EMI) வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நிறுவனத்தின் இந்த சலுகை ஜூன் 30 வரை செல்லுபடியாகும். ஆனால் இந்த சலுகை திட்டம் வெற்றி பெற்றால், அதற்கேற்ப இதை மேலும் நீட்டிக்கப்படலாம்.
ALSO READ | ஊழியர்களுக்கு good news: உங்கள் ஊதியம் இந்த ஆண்டு குறையாது, இதுதான் காரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR