Pan Card For Children: அரசு வழங்கும் அடையாள அட்டைகளை சரியான நேரத்தில் விண்ணப்பித்து பெறுவதும், தேவைப்படும் நேரத்தில் அதனை அப்டேட் செய்வதும் மிக அவசியமாகும். நீங்கள் 18 வயதை நிறைவுசெய்த உடன் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுக்கு விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதில் பான் கார்டு முக்கிய ஆவணமாகும். வங்கி கணக்கு தொடங்குவது முதல் எரிவாயு இணைப்பு பெறுதல் வரை பல்வேறு விஷயங்களுக்கு பான் கார்டு என்பது ஒரு சட்டப்பூர்வ ஆணவமாக செயல்படுகிறது. அதாவது, இதுபோன்ற விஷயங்களுக்கு பான் கார்டு ஓர் அடையாள சரிபார்ப்புக்கு பயன்பட்டாலும் மோசடி மற்றும் பணமோசடியை தடுப்பதற்கும் பான் கார்டு பயன்படுகிறது.
சிறுவர்களுக்கு பான் கார்டு
பான் கார்டு இல்லாமல் வங்கி சார்ந்த பாதி நடவடிக்கைகளை உங்களால் மேற்கொள்ள முடியாது. அதேபோல், வருமான வரி சார்ந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. இத்தகைய முக்கியமான அடையாள அட்டையாக திகழும் பான் கார்டு வயது வந்தவர்களுக்கு மட்டுமின்றி சிறுவர்களுக்கும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அந்த வகையில், எந்த வயதில் தங்களின் குழந்தைகளுக்கு பான் கார்டை பெற வேண்டும் என பெற்றோர்களுக்கு சந்தேகம் கிளம்பலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | துணியே இல்லாமல் குளிப்பது சரியா? மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள்
இந்தியாவை பொறுத்தவரை வங்கி சார்ந்த அனைத்து வேலைகளுக்கும், வரி சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டு தேவைப்படுவதால், அதனை பெற வயது வரம்பு என ஏதுமில்லை. எனவே, எந்த வயதினரும் யார் வேண்டுமானாலும் இந்தியாவில் வசிப்பவர்கள் பான் கார்டை விண்ணப்பிக்கலாம். சிறு குழந்தைகள் இருந்தாலும் பான் கார்டுக்கு பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அதிலும் சில விதிகள் இருக்கின்றன. அவை குறித்தும் இங்கு பார்ப்போம்.
சிறுவர்களுக்கு பான் கார்டு விண்ணப்பிக்கும் வழிமுறை
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பான் கார்டு வேண்டும் என்றால் இந்த வழிமுறை பின்பற்றி அதற்கு விண்ணப்பியுங்கள்.
- முதலில், https://nsdl.co.in/ இந்த பான் கார்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வகைமையில் உங்களுக்கு தேவையான பிரிவை தேர்வு செய்யவும்.
- அதன் பின்னர் கேட்கப்படும் உங்களின் தகவல்களை உள்ளீடு செய்யவும். அதில் 18 வயதுக்கும் குறைவானோருக்கான விண்ணப்பத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதில் அந்த சிறுவரின் தந்தையின் சான்றிதழோ அல்லது அந்த விண்ணப்பதாரரின் வயது சான்றுக்காக ஒரு ஆவணத்தையோ நீங்கள் சமர்பிக்க வேண்டும்.
- அதோடு பெற்றோரின் ஆவணங்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஆவணங்களை தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
அதில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் கையொப்பமிட வேண்டும்.
- இதன் பின்னர் கேட்கும் தொகையை செலுத்தி, அதனை நிறைவு செய்யவும். 15 நாள்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு பான் கார்டு டெலிவரி செய்யப்படும்.
நீங்கள் உங்களின் குழந்தைகளின் பெயரில் வங்கியில் கூட்டு கணக்கு தொடங்கினாலோ, அஞ்சல் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்கினாலோ அல்லது ஏதேனும் முதலீடுகளை தொடங்கினாலோ இந்த பான் கார்டு நிச்சயம் பயன்படும். எனவே, தொடக்க காலத்திலேயே சற்று நேரம் செலவழித்து பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பெற்றுக்கொள்வது நிச்சயம் பிற்காலத்தில் பெரும் நன்மையை விழைவிக்கும்.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசு! இந்த திட்டங்களை தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ