எக்கச்சக்கமான கடனை கிரெடிட் கார்டு மூலமே ஈஸியாக அடைக்கலாம்... தீர்வு இதோ!

Credit Card Update: கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் செய்வதன் மூலம், கடனின் வட்டி விகிதம் குறையும். அதனை எப்படி செய்வது, அதனை செய்யும் வழிமுறைகளை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 24, 2023, 11:08 AM IST
  • கிரெடிட் கார்டை அவசியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • கிரெடிட் கார்டில் சரியாக கடனை திருப்பி செலுத்தாவிட்டால் CIBIL ஸ்கோர் அடிபடும்.
  • முதலில், இருப்புத் தொகையை மாற்றும் கிரெடிட் கார்டை வாங்க வேண்டும்.
எக்கச்சக்கமான கடனை கிரெடிட் கார்டு மூலமே ஈஸியாக அடைக்கலாம்... தீர்வு இதோ! title=

Credit Card Update: கிரெடிட் கார்டுகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் கிரெடிட் கார்டுகளை எடுத்துக்கொள்வதன் மூலம், பணம் இல்லாதபோதும் தேவையில்லாமல் அதாவது எந்த அவசியமும் இன்றி செலவழிக்கும் பழக்கத்தை மக்கள் பெறுவது பல முறை நீங்களே பார்த்திருப்பீர்கள். 

ஆரம்பத்தில் இது ஒரு சிறிய தொகையாக இருக்கலாம், விரைவில் அதை திரும்பவும் செலுத்தி விடலாம் என்று மக்கள் தங்கள் மீதே அதிக நம்பிக்கையை கொள்கிறார்கள். மெதுவாக சூழ்நிலை கையை விட்டு வெளியேறி, மாத இறுதியில் கிரேடிட் கார்டு பில் வரும்போது மக்கள் யதார்த்தத்தை உணர்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் ஒரே நேரத்தில் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் என்னும் கொடூர ராட்ச்சனின் கரங்களில் சிக்கிக் கொள்வது இங்கு அதிகம் நடக்கிறது.

கடன் அட்டை பரிமாற்றம்

அதிக கிரெடிட் கார்டு பில்களின் காரணமாக, CIBIL ஸ்கோரும் கடுமையாக குறைகிறது. மக்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்த பல்வேறு ஆப்ஷன்களை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், மீதமுள்ள இருப்புத் தொகையை பரிமாற்றுவதாகும். இது நிதி அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் அட்டைதாரரின் பண மேலாண்மை திறன்களை பலப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் என்றால் என்ன மற்றும் அது கடனில் இருந்து மீள்வதற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 

கிரெடிட் கார்டு இருப்பு பரிமாற்றம் என்றால் என்ன?

அதிக வட்டி விகிதத்துடன் ஒருவரது கிரெடிட் கார்டில் நிறைய கடன் நிலுவையில் இருந்தால், இருப்பு பரிமாற்றம் நன்மை பயக்கும் ஒன்று. கார்டுதாரர்கள் தங்கள் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகையை வேறு எந்த நிதி நிறுவனத்திற்கும் குறைந்த வட்டி விகிதத்தில் மாற்றலாம். எல்லா வங்கிகளும் இருப்புப் பரிமாற்றங்களை அனுமதிப்பதில்லை என்றாலும், சில வங்கிகள் இதனை அனுமதிக்கின்றன. எனவே கிரெடிட் கார்டைத் தேர்ந்தெடுக்கும்போது புத்திசாலித்தனமாக இந்த ஆப்ஷன்கள் இருக்கிறதா என்பதை பார்த்து, அதனை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | உங்களின் கிரெடிட் கார்டின் வரம்பு திடீரென குறைந்துவிட்டதா... அது ஏன் தெரியுமா?

கடனில் இருந்து தப்பிப்பது எப்படி?

நிலுவைத் தொகையை வேறொரு நிதி வழங்குபவருக்கு மாற்றுவது, வட்டி விகிதங்களைக் குறைக்கலாம், இது கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு நிச்சயமாக உதவும். மேலும் பல சந்தர்ப்பங்களில் நிலுவைத் தேதிகளும் கவனிக்கப்படும். தற்போதுள்ள கிரெடிட் கார்டில் ஏபிஆர் அதிகமாக இருந்தால், குறைந்த அல்லது பூஜ்ஜிய ஏபிஆர் உள்ள கார்டுக்கு இருப்பை மாற்றுவது வட்டி செலுத்துவதில் சேமிக்க உதவும். அட்டைதாரர்கள் மேலும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை அவர்களின் புதிய கிரெடிட் கார்டு வழங்குநரால் தீர்மானிக்கப்படும்.

கிரெடிட் கார்டு இருப்பை எவ்வாறு மாற்றுவது?

- இருப்புப் பரிமாற்ற வசதியுடன் வரும் வங்கியில் இருந்து புதிய கிரெடிட் கார்டைக் கண்டுபிடித்து அதில், விண்ணப்பிக்கவும்.
- இதற்குப் பிறகு இருப்புப் பரிமாற்ற வசதியைத் தொடங்க வங்கிக்குத் தெரிவிக்கவும்.
- உங்கள் தற்போதைய அட்டை விவரங்களை வழங்கவும், மேலும் மாற்றப்பட வேண்டிய தொகையையும் குறிப்பிடவும்.
- இருப்புப் பரிமாற்றம் முடிந்ததும், குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தொடங்குங்கள்.

மேலும் படிக்க | SBI RuPay கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் UPI-ல் பணம் செலுத்தலாம் - இதோ வழிமுறை
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News