Gold / Silver Rates Today: கடந்த சில நாட்களாக மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ப சற்று இறங்கியிருந்த தங்கத்தின் விலை, மீண்டும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தங்க விலையில் காணப்படும் ஏறுமுகம் நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 4,557 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதே போல், ஒரு சவரன் தங்கம் ரூ. 160 விலை அதிகரித்து ரூ. 36,456-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியும் விலை உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 40 பைசாவுக்கு விற்பனை ஆகிறது.
கொரோனா பெருந்தொற்று (Coronavirus) காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உள்ளது. பல இடங்களில் தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தொழிதுறையில் தேக்கம் உள்ளது. மக்கள் தற்போது எதிர்பாராத வகையில் தங்கத்தில் முதலீடுகள் செய்து வருகின்றனர்.
ALSO READ: Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன
தங்க (Gold) முதலீடுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் அதிகரிப்பைக் காண முடிகின்றது.
எனினும், சுமார் ஒரு மாதமாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவினைக் காண முடிந்தது. 11 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையில் அதிகரிப்பைக் காண முடிகின்றது. தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,000-ஐத் தாண்டியுள்ளது.
இதற்கிடையில் தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி (Sliver) விலை நிலவரங்களை இங்கே காணலாம்:
ALSO READ: Sovereign Gold Bonds: இன்று தங்கத்தை குறைந்த விலைக்கு வாங்கும் வாய்ப்பு, விலை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR