புது டெல்லி: வீட்டு மனைகள் (Home) மற்றும் சொத்து விகிதங்கள் தற்போது குறைந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் இந்த நேரத்தில் சொத்து வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு எனக் கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் மற்றும் நொய்டாவில் வீடுகளின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் முறையே ஏழு மற்றும் நான்கு சதவீதம் குறைந்துள்ளது. குடியிருப்பு வீடுகளை விற்பனை செய்வதில் தாமதம், வீடு (Home) வாங்க வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துள்ளது மற்றும் பல பெரிய அடுக்குமாடி (Apartment) கட்டடங்களின் திவால்நிலை ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.
தற்போதைய குருகிராமில் குடியிருப்பு விலையானது மார்ச் 2015 முதல் இருந்த விலையில் சதுர அடிக்கு ஏழு சதவீதம் குறைந்து 5,236 ரூபாயாக குறைந்துள்ளது. மறுபுறம், உத்தரபிரதேசத்தின் நொய்டாவில், இது நான்கு சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. அதாவது இது சதுர அடிக்கு ரூ .3,922 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் சொத்து விலை உயர்ந்தது:
அதே நேரத்தில், ஹைதராபாத்தில் வீடுகளின் சராசரி விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது சதுர அடிக்கு ரூ .5,318 ஐ எட்டியுள்ளது. இதேபோல், மும்பையிலும் சதுர அடிக்கு 15 சதவீதம் அதிகரித்து ரூ .9,446 ஆகவும், பெங்களூரில் சதுர அடிக்கு 11 சதவீதம் அதிகரித்து ரூ .5,194 ஆகவும் அதிகரித்துள்ளது. அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் புனே ஆகியவையும் வீட்டு விலையில் இரண்டு முதல் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: உங்கள் லோனுக்கான EMI எவ்வளவு குறைந்தது.. எவ்வளவு தெரிந்துக்கொள்ளுங்கள்