தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முடியை பாதுகாக்க முக்கியமான ஒன்று. முடிக்கு எண்ணெய் தேய்க்கவில்லை என்றால் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே தினசரி எண்ணெய் வைப்பது நல்லது. அதே சமயம் இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் தடவலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஒருசிலர் இரவில் முடிக்கு எண்ணெய் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் முதல் வேப்ப எண்ணெய் வரை முடிக்கு எண்ணெய் தடவுவது முடி பராமரிப்பு வழக்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. வீட்டில் உள்ள பெரியர்வகளும் இதனை தினசரி அறிவுறுத்துகின்றனர். தற்போது பலரும் முடிக்கு எண்ணெய் வைப்பதற்கு பதிலாக செயற்கை தயாரிப்புகள் மற்றும் சீரம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
முடிக்கு எண்ணெய் தடவுவதால் பல்வேறு நண்மைகள் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் அதனை விரும்புவதில்லை. முடிக்கு தொடர்ந்து எண்ணெய் தடவி வந்தால் முடிக்கு நல்ல ஊட்டமளித்து வேரில் இருந்து வலுபட உதவுகிறது. உண்மையில், முடிக்கு எண்ணெய் தடவுவது ஒவ்வொரு முடி பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. வெயில் காலங்களில் முடி வறட்சியை தடுக்க எண்ணெய் தடவ வேண்டும். ஒருசிலர் இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் வைத்து, காலையில் ஷாம்பு போட்டு குளிக்கின்றனர். இதனை ஒருசிலர் பின்பற்றினாலும், இது முடிக்கு நல்லதா? இல்லை கெட்டதா என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே இரவில் முடிக்கு எண்ணெய் தடவி தூங்குவது நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முடிக்கு இரவில் எண்ணெய் வைத்தால்...
உண்மையில் இரவில் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முடிக்கு சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதன் காரணமாக முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்றாக வளர்கிறது. இரவு நேரத்தில் தேங்காய், ஆலிவ் மற்றும் ஆர்கன் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். பிறகு காலையில் முடிக்கு ஷாம்பூ பயன்படுத்தினால் முடியை பட்டுப் போலவும், பளபளப்பாகவும் மாற்றலாம். தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த மற்றும் முடி பிரச்சனைகளை சரி செய்ய இரவில் முடிக்கு எண்ணெய் தடவவும். கூடுதலாக எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். தலைக்கு எண்ணெய் தடவினால் தலையின் வறட்சியும் குறைந்து முடிக்கு ஊட்டமளிக்கும். பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட எண்ணெய்களை முடிக்கு பயன்படுத்தலாம்.
இரவு நேரத்தில் முடிக்கு எண்ணெய் வைப்பதால் முடிக்கு எந்தவித பாதிப்புகள் ஏற்படவில்லை என்றாலும், முடி வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்விக்கு முறையான பதில் இல்லை. ஆனால் முடிக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. அதே சமயம் இரவில் முடிக்கு எண்ணெய் தடவுவதால் சில பாதிப்புகளும் ஏற்படுகிறது. முடிக்கு எண்ணெய் வைத்து படுக்கும் போது தலையணை முழுவதும் எண்ணெய் பட வாய்ப்புள்ளது. இதனால் துணிகளில் பிசு பிசு தன்மை ஏற்படலாம். ஒரு சிலருக்கு எண்ணெய் வைப்பதால் முகத்தில் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அதிக ஈரப்பதம் காரணமாக சளி பிடிக்கும் அபாயமும் உள்ளது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ