ஹர்திக் பாண்டியாவின் மணி பர்ஸ் விலை ரூ.80 ஆயிரம்? அப்படி என்ன ஸ்பெஷல்

ஹர்திக் பாண்டியா பயன்படுத்தும் மணி பர்ஸின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 5, 2022, 04:45 PM IST
ஹர்திக் பாண்டியாவின் மணி பர்ஸ் விலை ரூ.80 ஆயிரம்? அப்படி என்ன ஸ்பெஷல் title=

இந்திய கிரிக்கெட் அணி அல்லது ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பிளேயராக விளையாட தொடங்கிட்டாலே, தானாக ஒருவர் பிளேயர் மாடலாக மாறிவிடுவார். அவர்கள் மீது கோடி கணக்கான பணத்தை செலவழிக்க நூற்றுக்கணக்கான பிராண்டுகள் எப்போதும் தயாராக இருக்கின்றன. அந்தவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பல பிராண்டுகளின் தூதுவராக இருக்கிறார். அவரின் விளம்பரங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு இருக்கும். 

மேலும் படிக்க | ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதுரியா யார் தெரியுமா?

கிரிக்கெட் களத்தில் ஆல்ரவுண்டராக இருப்பதுபோலவே பேஷன் உலகிலும் ஜொலிக்கிறார் அவர். கவர்ச்சியான உடை, வாட்ச், பர்ப்யூம், ஷூ உள்ளிட்ட பல பிராண்டுகளின் மாடலாக இருக்கும் அவர், இந்திய அணியின் ஜெர்சியை கடந்து வழக்கமான நாட்களில் ஸ்டைலிஷான உடைகளில் ஜொலிப்பார். அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே பல லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ளவையாக இருக்கின்றன. பணம் செலவழித்து எந்த பொருளையும் ஹர்திக் பாண்டியா வாங்க வேண்டிய அவசியமே இருக்காது. 

ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் என்ன பொருள் பயன்படுத்துகிறார் என்பதை பேஷன் உலகம் உன்னிப்பாக கவர் செய்து கொண்டிருக்கிறது. அண்மையில் விமான நிலையம் ஒன்றில் மணிபர்ஸ் ஒன்றுடன் ஜாலியாக உலா வந்த அவரை விடுமா? பேஷன் உலகம். நச் என ஒரு கிளிக் எடுத்து, அவர் பயன்படுத்தும் மணிபர்ஸ் குவாலிட்டியை அலசி ஆராய்ந்துவிட்டனர். 

ரிலாக்ஸ்டு டிராக் பேண்டுடன், கிளாசிக் வாட்ச் அணிந்திருக்கும் அவர், ஹீரோவுக்கான அத்தனை ஸ்டைலுடன் லூயிஸ் உய்ட்டன் பை LV Pochette Voyage MM-ஐ எடுத்துக் கொண்டு சென்றார். அந்த பையின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் சுமார் 79,600 ரூபாய் ஆகும். இவ்வளவு ஆடம்பரமானதா பாண்டியா வைத்திருக்கும் மணிபர்ஸ்? என அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

மேலும் படிக்க | Income Tax Return: படிவம்-16 இல்லாவிட்டாலும் ITR தாக்கல் செய்யலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News