பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசினால் என்ன செய்வது?

Parenting Tips Tamil: குழந்தைகள் பலர், தகாத வார்த்தைகளை தவறுதலாக பேசுவது சகஜம். அவர்களை மேலும் அது போன்ற வார்த்தைகளை பேச விடாமல் செய்யலாம். 

Written by - Yuvashree | Last Updated : Nov 6, 2023, 04:07 PM IST
  • குழந்தைகளின் சூழல்தான் அவர்களை மாற்றுகிறது.
  • குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசினால் என்ன செய்வது?
  • பெற்றோர்களுக்கான சிம்பிள் டிப்ஸ் இதோ.
பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசினால் என்ன செய்வது?  title=

குழந்தைகள் வளரும் பருவத்தில் இருக்கும் போது எதை பார்க்கிறார்களோ, எதை கேட்கிறார்களோ, அதுவாகவே ஆகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தவறான சூழலில் வளரும் குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை கேட்டு வளர்வதால், வெகு சிறுவயதிலேயே அந்த வார்த்தைகளை இயல்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். பெற்றோர்களின் கவனிப்பிற்கு கீழ், மிகவும் அன்பான, பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தைகள் சிலர் கூட அவ்வப்போது தவறான வார்த்தைகளை உபயாேகிப்பதுண்டு. இது போன்று குழந்தைகள் தவறான பேச்சு மொழியை உபயோகிக்கையில் என்ன செய்ய வேண்டும்? இங்கே பார்ப்போம். 

இது பெற்றோர்களின் தவறாக இருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம்…

குழந்தைகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் அவர்களது பெற்றோர்கள் காரணமாக இருக்கலாம் என்றாலும் அவர்கள் பார்க்கும் சூழலும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அதனால், குழந்தைகள் கெட்ட வார்த்தை பேசுவதால் அதன் பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. பள்ளி, தொலைக்காட்சி, சாலையில் யாராவது பேசுவதை பார்ப்பது என பேச தெரிந்த குழந்தைகள் நிறைய விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பர். அப்படி கவனிப்பதால் அவர்கள் பல விஷயங்களை தங்களுக்குடையதாக எடுத்து கொள்கின்றனர். அப்படி வருபவைதான் கெட்ட வார்த்தைகளும். சமயங்களில் பெற்றோர், குழந்தைகள் எதிரில் அது போன்ற தகாத வார்த்தைகளை உபயோகித்திருந்தாலும் இந்த நிலை நேரலாம். அதனால், பெற்றோர்கள் அவர்களது குழந்தைகள் எதிரில் பேசுகையில் கவனமாக இருக்க வேண்டும். 

1.கண்டுகொள்ளாமல் இருங்கள்..

உங்களது குழந்தை தகாத வார்த்தை அல்லது புண்படுத்தும் வகையில் முதல் முறையாக ஏதாவது பேசும் போது உங்களுக்கு கோபம் வருவது இயல்பு. இதனால் நீங்கள் அதிர்ச்சியடையவும் செய்யலாம். ஆனால், அவர்கள் எதையாவது கூறியவுடன் நீங்கள் அவர்களை பயமுறுத்தும்  நடந்து கொண்டால் அவர்களை அது குழப்பமடைய செய்து விடும். அதை நீங்கள் அப்படி செய்ய கூடாது என்று அதட்டி கூறினால் அவர்கள் அந்த வார்த்தையை மறக்கவே மாட்டார்கள். அதனால், உணர்ச்சிவசப்படாமல், உங்கள் குழந்தையை அது போன்ற வார்த்தைகளை பேசக்கூடாது என மென்மையாக கூற வேண்டும். 

Child

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

2.அர்த்தம் குறித்து கேளுங்கள்:

பெரும்பாலான சமயங்களில் குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகள் என்ன அர்த்தம் என்று கூட தெரியாது, அது மட்டுமன்றி, அவர்கள் அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள இன்னும் இளமையாக இருக்கலாம். அவர்களின் வயதின் அடிப்படையில், அந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று அவர்களுக்குத் தெரியுமா என்று அவர்களிடம் கேட்டு, அது ஏன் கெட்ட வார்த்தை என்று விளக்குவது பொருத்தமானதா என்று பாருங்கள். அப்படி நீங்கள் அந்த வார்த்தையை விளக்க விரும்பவில்லை என்றால் அந்த வார்த்தை பேசுவதால் பிறருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கலாம். 

3.ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்று விளக்குங்கள்:

உங்களது குழந்தை வேறு ஒருவரிடம் தகாத வார்த்தைகலில் பேசினால், அவர்களுக்கு அதற்கான அர்த்தம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் இது போன்ற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்பதை விளக்குங்கள். குழந்தை, கோபத்தை வெளிப்படுத்த அது போன்ற வார்த்தைகளை பேசியிருக்கிறது என்றால் அந்த கோபத்தை வெளிப்படுத்த வேறு என்ன வழி இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்துங்கள். வன்முறை அல்லது தவறான வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது என்பதை புரியவையுங்கள். 

Child

4.மன்னிப்பு கேட்க கற்றுக்கொடுங்கள்:

சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் எல்லா உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்த முடியாது, அவர்கள் தவறுகளைச் செய்து அவர்களின் குணத்தையும் ஆளுமையையும் கண்டுபிடிப்பது முற்றிலும் சகஜம். இருப்பினும், குழந்தை தற்செயலாக இதைச் செய்யும் போது நீங்கள் எளிதாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்காலத்தில் இது அவர்களையும் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பெரிதாக பாதிக்கும். அதனால், உங்கள் குழந்தை தவறு செய்தவுடன் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்பதை பெற்றோர்கள் உறுதி படுத்த வேண்டும். 

மேலும் படிக்க | Weight Loss Diet: உடல் எடையை குறைக்க தூங்கும் முன்பு சாப்பிட வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News