ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் இருக்கும். அவர்கள் வளரும் சூழ்நிலையை பொறுத்து குணம் மற்றும் மற்ற விஷயங்கள் மாறுபடும். ஒருவரின் குணமே அவர் வாழ்க்கையில் எவ்வளவு உயர்கிறார் என்பதை தீர்மானிக்கிறது. குழந்தைகள் அவர்கள் வளரும் போது பார்க்கும், கேட்கும் விஷயங்களை பொறுத்து தான் வளர்கின்றனர். குழந்தைகளின் சில சிறப்புப் பழக்கவழக்கங்களிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பதை முடிவு செய்யலாம். எனவே குழந்தைகளுக்கு என்ன பழக்கங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான பழக்கவழக்கங்கள் இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றியாளராக மாறுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குழந்தை வளர்ப்பு... பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய ‘சில’ முக்கிய விஷயங்கள்.!
சூழ்நிலைகளை கையாள வேண்டும்
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை எதிர்கொள்கின்றனர். அவற்றை எப்படி கையாள்வது என்பதை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். தோல்விகள் மற்றும் சிரமங்களை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இது இல்லாத சில குழந்தைகள் சிறு விஷயங்களுக்கு கூட மனமுடைந்து போகின்றனர். வாழ்க்கையிலும் வேலையிலும் வெற்றிபெற இந்த குணம் மிகவும் முக்கியமானது. ஒரு குழந்தை தோல்வி அல்லது ஏமாற்றத்தை சந்தித்தால் அதில் இருந்து விரைவாக மீண்டும் வர வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். எப்படிப்பட்ட கடினமான நேரங்களிலும் நேர்மறையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். இந்த குணம் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
ஆர்வம் இருக்க வேண்டும்
ஒரு விஷயத்தில் இருக்கும் ஆர்வம் தான் அதன் மீதுள்ள ஈடுபாட்டை அதிகரிக்க செய்கிறது. மேலும், அதில் புதிய விஷயங்களையும், புதுமையையும் தூண்டுகிறது. எந்தஒரு விஷயத்திலும் அதிக ஆர்வமுள்ள குழந்தைகள் புதிய விஷயங்களை எளிதாக கற்று கொள்கின்றனர். இதன் காரணமாக குழந்தைகளின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கிறது. பொதுவாக பெற்றோர் குழந்தைகள் கேள்வி கேட்டாலே கோபப்படுகின்றனர். அப்படி இல்லாமல், அவர்களை கேள்வி கேட்கவைத்து புதிய விஷயங்களை கற்று கொள்ள செய்யுங்கள்.
சுய கட்டுப்பாடு அவசியம்
சுய கட்டுப்பாடு இல்லாதவர்கள் வாழ்க்கையில் அனைத்தையும் இழக்க நேரிடும். நீண்ட கால இலக்குகளை அடைய சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். இது அவர்களின் உணர்ச்சிகளையும் நடத்தையையும் கட்டுப்படுத்தும் திறனைக் குறிக்கிறது. எப்போதும் குழந்தைகளுக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளை அமைக்க கற்று கொடுங்கள். இதன் மூலம் ஒரு செயலை முடிக்க அவர்கள் எடுத்து கொள்ளும் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கைக்கும் உதவும்.
உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்
ஒரு மனிதராக எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிபெறுவதை தாண்டி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம். இது வேலையிலும், குடும்பத்திலும், உறவுகளிலும் அவசியம். மற்றவர்களுடன் பேசி பழக குழந்தைகளை பக்குவப்படுத்துங்கள். இது அவர்களின் உலகை இன்னும் பெரியதாக மாற்றும். மற்றவர்களுக்கு உதவ உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டியது அவசியம்.
படைப்பாற்றல் வேண்டும்
ஒரு விஷயத்தை கற்று கொள்வதில் இருக்கும் ஆர்வம் புதிய விஷயங்களை உருவாக்குவதிலும் இருக்க வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாதையில் பயணிக்காமல் புதிய வழிகளை யோசிக்க வேண்டும். ஒரு விஷயத்தில் தனித்துவமாக இருப்பது குழந்தைகளுக்கு பெரிதும் உதவும். குழந்தைகளை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும் ஈடுபட செய்ய வேண்டும். மேலும் பாட்டு பாடுவது, நடனம், ஓவியம் என அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய சொல்ல வேண்டும். உங்கள் குழந்தைகள் புதிதாக எதையும் செய்ய முற்பட்டால் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து செய்ய சொல்ல வேண்டும்.
மேலும் படிக்க | உங்கள் குழந்தைக்கு படிப்பில் கவனம் இல்லையா... ‘இந்த’ மூளை விளையாட்டுகள் உதவும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ