இந்தியாவை பொருத்தவரை, திருமணமாகாமல் லிவ்விங் டூகெதர் உறவில் இருக்கும் தம்பதிகள் பல்வேறு பிரச்ச்னைகளை சந்திக்கின்றனர். தேவையில்லாத தவறான சமூக பார்வைகளும் அவர்கள் மீது விழுகிறது. ‘சமுதாய சேவகரகள்’ என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் சில சீர்த்திருத்தவாதிகள் இவ்வாறு ஒன்றாக தங்கியிருப்போரை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதுடன் அவர்களை ஒரு குற்றவாளிகளை போல நடத்துவதும் நடக்கிறது. இவர்களில் சிலர், அடுத்தவர் வாழ்வில் நுழைந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிடுவதையே வேலையாக கொண்டுள்ளனர். சில இந்திய சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொண்டால், இவ்வாறு மற்றவர் வாழ்க்கைக்குள் தலையிடுவோரை முற்றிலுமாக தவிர்க்கலாம். அவை என்னென்ன சட்டங்கள்..?
இந்தியாவில் லிவ்விங் டூகெதர் சட்டப்படி குற்றமா..?
பலருக்கு இந்தியாவில் லிவ்விங் டூகெதர் உறவு சட்டப்படி குற்றமா இல்லையா என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. பலருக்கு இது குற்றம் இல்லை என்பதே தெரிவதில்லை. உயர்நீதி மன்றமே 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு பேர் அவர்களது விருப்பத்தின் பேரில் திருமணம் ஆகாமல் ஒன்றாக இருப்பது செல்லுபடியாகும் என அறிவித்து விட்டது.
ஹோட்டல் அறையில் ஒன்றாக தங்குதல்:
18 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஜோடிகள், ஹோட்டல் அறையில் தங்குவதற்கு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. அவர்களுக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் சான்று மட்டும் இதற்கு தேவையானதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் ஒரே அறை எடுத்து தங்கக்கூடாது என எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதே போல எந்த விடுதியும் திருமணம் ஆகாதவர்களை தங்க வைக்கக்கூடாது என எந்த சட்டமும் கூறுவதில்லை. இது சட்டமாக இருந்தாலும், சில தங்கும் விடுதிகள் திருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக தங்குவதற்கு அனுமதி தருவதில்லை.
ஒன்றாக வெளியில் சுற்றுவது:
ஐபிசி செக்ஷன் 294ன் படி, பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது குற்றம் என்றும் இதனால் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சட்டத்தை சில காவல் துறையினர் மிகவும் துஷ்பிரயோகம் செய்வதாக ஒரு கூற்று நிலவுகிறது. பார்க், பீச்சில் காற்று வாங்க கை கோர்த்து உட்கார்ந்து கொண்டிருப்பவர்களை கூட போலீஸார் கண்டிப்பதாகவும் அவர்களை சட்டத்தை வைத்து பயமுறுத்துவதாகவும் புகார்கள் எழுகிறது.
சொத்துகளை வாங்குதல்:
திருமணம் ஆகாதவர்கள் ஒன்றாக வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்க கூடாது என எந்த இந்திய சட்டமும் கூறவில்லை. 18 வயதிற்கு மேற்பட்ட இரு வயது வந்தோர் ஒன்றாக வீடு வாடகைக்கு எடுப்பது, ஒன்றாக சேர்ந்து சொத்துக்களை வாங்குவது போன்ற விஷயங்கள் கண்டிப்பாக இந்தியாவில் செல்லுபடியாகும்.
வன்முறை:
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் லிவிங் உறவில் இருக்கும் பெண்கள், தங்கள் பார்ட்னரால் கொடுமைக்கு ஆளக்கப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். இது, திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் பெண்களை பாதுகாக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் ஆண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
உடலுறவு:
திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் அல்ல. இரு வயது வந்தோருக்கான அடிப்படை உரிமைகளுள் இதுவும் ஒன்று. இது, தனி நபர் சுதந்திரம் என்றும், இது குறித்து யாரும் புகார்கள் கொடுக்க முடியாது என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது உடலுறவு வைத்துக்கொள்வது சட்டப்படி குற்றம் அல்ல. இரு வயது வந்தோருக்கான அடிப்படை உரிமைகளுள் இதுவும் ஒன்று. இது, தனி நபர் சுதந்திரம் என்றும், இது குறித்து யாரும் புகார்கள் கொடுக்க முடியாது என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
மேலும் படிக்க | ‘பீர்’ உடலுக்கு நல்லதா-கெட்டதா? ஆய்வுகளும் மருத்துவர்களும் கூறுவது இதுதான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ