வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வருமான வரித்துறையில் 30,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 6 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 23, 2022, 01:16 PM IST
  • வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • மாதம் 30,000வரை சம்பளம்
  • ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்
வருமான வரித்துறையில் வேலை வாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் title=

வருமான வரித்துறை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Inspector மற்றும் Tax Assistantபதவிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

வருமான வரித்துறையில் காலியாக உள்ள Inspector பணிக்கு என 01 பணியிடமும், Tax Assistant பணிக்கு என 05 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:

Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு  டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.

Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராகவும், ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Inspector and Tax Assistant வயது விவரம்:

Inspector பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரிய விருப்பமா? இந்த தகுதிகள் அவசியம்

Tax Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 27 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Inspector பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 7 என்ற ஊதிய அளவின்படி, ரூ.9,300 முதல் ரூ.34,800வரை மாத ஊதியமாக தரப்படும்.

மேலும் படிக்க | தமிழக நீதிமன்றங்களில் பணிபுரிய ஆர்வம் உண்டா? 1412 பேருக்கு வாய்ப்பு

Tax Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level 4 என்ற ஊதிய அளவின்படி, ரூ.5,200 முதல் ரூ.20,200வரை மாத ஊதியமாக தரப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/37... என்ற தளத்தில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 31.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News