PAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி

உங்கள் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) உங்கள் ஆதார் அட்டையுடன் ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்கப்பட வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 15, 2021, 01:50 PM IST
PAN-Aadhaar linking: புதிய வருமான வரி இணையதளத்தில் PAN-Aadhaar இணைப்பது எப்படி title=

உங்கள் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) உங்கள் ஆதார் அட்டையுடன் ஜூன் 30 ஆம் தேதிக்குள் இணைக்கப்பட வேண்டும். அப்படி இணையக்கப்படவில்லை என்றால் உங்கள் PAN கார்டு அடுத்த மாதத்திலிருந்து வேலைச் செய்யாது. PAN எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு பல முறை நீட்டித்திருந்தது. 

முதலில் பான் – ஆதார் (PAN - Aadhaar) இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2021 என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கடைசி நேரத்தில் பலரும் இணைக்க முயற்சி செய்து இணைய சேவையகம் முடங்கியதை அடுத்தும் மீண்டும் இதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 30, 2021 தேதிக்குள் ஆதார் உடன் இணைக்கப்படாத அனைத்து PAN கார்டுகளும் (PAN Card) பயனற்றதாகும். ஏனெனில், காலக்கெடு முடிந்ததும் அவை செயல்படாமல் போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Aadhaar: ஆதாரின் ‘இந்த’ சேவைகளை பெற இண்டெநெட் தேவையில்லை 

இந்நிலையில் உங்கள் PAN எண் உங்கள் ஆதார் (Aadhaar Card) உடன் இணைக்கப்படவில்லை என்றால் புதிய வருமான வரி இணையதளத்தில் இணைப்பது எப்படி என்று இங்கே பார்போம்.,

1. https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வலைத்தளத்திற்குச் செல்லவும்
2. அதில் கீழே ஸ்கிரோல் செய்து, போர்ட்டலின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘Link Aadhaar’ எனும் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. பிறகு புதிய வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4. அடுத்து, உங்கள் பான், ஆதார் எண், பெயர் மற்றும் மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை நிரப்பவும்
5. அனுமதி தேவைப்படும் பெட்டிகளைக் குறிக்கவும். முடிந்தவுடன் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்
6. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க OTP ஐ உள்ளிட்டு, இணைக்கும் செயல்முறையைத் தொடங்கவும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் உடன் PAN இணைப்பது எப்படி?
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற ஏதேனும் ஒரு எண்ணுக்கு  >[ UIDPAN (12-இலக்க ஆதார் எண்) (10-இலக்க PAN) ]<என்ற வடிவில் SMS அனுப்புவதன் மூலமாகவும் இணைத்துக்கொள்ள முடியும்.

ALSO READ | Aadhaar Photo Change: ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News