100வது பிறந்தநாளை கொண்டாடும் ஒரு ரூபாய் நோட்டு!!

இந்தியாவில் 1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது. 

Last Updated : Nov 30, 2017, 10:06 AM IST
100வது பிறந்தநாளை கொண்டாடும் ஒரு ரூபாய் நோட்டு!! title=

இந்தியாவில் 1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது. 

தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. டிஜிட்டல் முறை இருந்தாலும் மக்கள் ரூபாய் நோட்டுகளை பயன் படுத்துவதை நிறுத்த வில்லை. 

இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.

முதல் ஒரு ரூபாய் நோட்டில் கப்பே, மெக் வாட்டர்ஸ் மற்றும் டென்னிங் உள்ளிட்ட 3 பிரிட்டிஷ் நிதி செயலாளர்களின் கையெழுத்து போடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதன்பின்னர், 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.

1952-ம் ஆண்டிலிருந்து 1982-ம் ஆண்டு வரை ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. 

Trending News