New Car Insurance Policy: எவ்வளவு ஓட்டினீர்களோ அவ்வளவு கட்டுங்கள்!! ஆம், இப்படிப்பட்ட காப்பீட்டு முறையைத் தான் காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் காருக்கான பாலிசியாகக் கொண்டு வந்துள்ளன. அதாவது, உங்கள் கார் எவ்வளவு ஓடுகிறதோ அவ்வளவு பிரீமியத்தை நீங்கள் செலுத்தினால் போதும்.
ஆண்டின் 365 நாட்களில் உங்கள் காரை 200 நாட்கள் மட்டுமே இயக்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் ஏன் ஆண்டு முழுவதுக்குமான பிரீமியத்தைக் கட்ட வேண்டும்? உங்கள் கார் ஓடாத நாட்களுக்கான பணத்தை தேவையில்லாமல் கொடுத்துள்ளீர்கள் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இந்த சிந்தனையை மனதில் கொண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு புதிய வகை பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது ‘Pay as you drive’ என்று அழைக்கப்படுகின்றது. இந்த கார் காப்பீட்டு பாலிசியைப் (Car Insurance Policy) பற்றி புரிந்துகொள்வோம்
ALSO READ: FD வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது SBI: முழு விவரம் உள்ளே
நீங்கள் காரை ஓட்டும் அளவிற்கு பிரீமியம் செலுத்தலாம்
காப்பீட்டு (Insurance) நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட ‘Pay as you drive’ பாலிசி மிகவும் தனித்துவமானது. காப்பீட்டுக் கொள்கையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் காரைப் பயன்படுத்தும் போது பிரீமியத்தை செலுத்துமாறு கேட்கப்படுகிறார்கள். அதாவது, ஓட்டுவதற்கு காரை எடுக்கும்போது இனி பிரீமியத்தை கட்டுவீர்கள்.
இந்த பாலிசியை நீங்கள் பிரத்யேகமானதாக ஆக்கிக்கொள்ளலாம்
இப்போது நாம் ஒரு வருடத்திற்கு ஒரு கார் (Car) பாலிசியை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இதில் வாடிக்கையாளர் தனது பிரீமியத்தைத் தனிப்பயனாக்கும் ஆப்ஷனும் இருக்கும். வழக்கமான மோட்டார் காப்பீட்டுக் கொள்கையில், வாடிக்கையாளர் கார் மாடலின் அடிப்படையில் பிரீமியத்தை செலுத்த வேண்டும். ஆனால் இங்கே வாடிக்கையாளர் அவர்களின் தேவைகள் மற்றும் ஓட்டுநர் பழக்கத்தைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வழி உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கார் எத்தனை கிலோமீட்டர் ஓடியது என்பதற்கு ஏற்ப அதன் பிரீமியம் இருக்கும்.
காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியைக் கொண்டு வந்தன
காப்பீட்டு ஒழுங்குமுறை நிறுவனமான IRDAI காப்பீட்டு நிறுவனங்களை இதுபோன்ற பாலிசியை கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, Bharti Axa General, Go Digit, TATA AIG, ICICI Lombard, Edelweiss போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் இதுபோன்ற பாலிசிகளை அறிமுகப்படுத்துகின்றன.
‘Pay as you drive’ என்றால் என்ன
இந்த திட்டத்தின் கீழ், ஒரு வாடிக்கையாளர் தனது கார் ஒரு வருடத்தில் எத்தனை கிலோமீட்டர் ஓடும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார். அதன்படி, பிரீமியம் (Premium) நிர்ணயிக்கப்பட்டுகிறது. வாடிக்கையாளர்களுக்கு 2500 கிமீ, 5000 கிமீ மற்றும் 7500 கிமீ என மூன்று ஸ்லேபுகள் கிடைக்கின்றன. அதிலிருந்து அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லாப்பை விட நீங்கள் ஒரு காரை அதிகமாக ஓட்டியிருந்தால், அந்த தொகையை டாப் அப் மூலம் செலுத்தலாம்.
ALSO READ: வீடு வாங்குபவர்களுக்கு good news: 30 bps வரை வட்டி விகிதத்தை குறைத்தது SBI!!
எடெல்விஸ் ஸ்விட்ச்சின் பாலிசி
ஒரு செயலியில் ஆட்டோ காப்பீட்டுக் கொள்கையை எடெல்விஸ் ஸ்விட்ச் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பாலிசியைத் தொடங்கலாம், நிறுத்தலாம். ஓட்டுநரின் வயது மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் காப்பீடு கணக்கிடப்படுகிறது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மொபைல் செயலி (Mobile App) மூலம் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் ஆன் ஆஃப் செய்ய முடியும். இருப்பினும், காரில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கார் திருடப்பட்டாலோ, முழு ஆண்டின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவீர்கள். அப்போது உங்கள் பாலிசி ஆஃபாக இருந்தாலும் உங்களுக்கு தொகை கிடைக்கும்.
டாடா ஏ.ஐ.ஜியின் ஆட்டோ பாதுகாப்பு கொள்கை
இதில், கார் ஒரு சாதனத்துடன் இணைக்கப்படும். இது இணைக்கப்பட்டவுடன் பாலிசியின் செயலாக்கம் துவங்கும். இந்த சாதனத்தை பாலிசி காலம் முழுதும் வைத்துக்கொள்ள வேண்டும். இது வாகனத்தின் உரிமையாளரின் ஓட்டுநர் நடத்தையைக் காட்டுகிறது. இதிலிருந்து, ஒரு தரவு உருவாக்கப்படுகிறது. அதன் மதிப்பீட்டின் அடிப்படையில், பாலிசிதாரர்களுக்கு எண்கள் வழங்கப்படுகின்றன. டாடா ஏ.ஐ.ஜியின் இந்தக் கொள்கையில், பாலிசிதாரர்களுக்கு 2500 கி.மீ முதல் 20,000 கி.மீ வரை வெவ்வேறு தொகுப்பில் பாலிசியை எடுக்க வசதி உள்ளது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR