வெளியானது பியார் பிரேமா காதல்: டிவிட்டர் விமர்சனம் என்ன?

ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 10, 2018, 11:16 AM IST
வெளியானது பியார் பிரேமா காதல்: டிவிட்டர் விமர்சனம் என்ன?
Courtesy: Twitter

ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்துள்ள பியார் பிரேமா காதல் படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளது. 

ஏற்கெனவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love என்ற பாடல் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது. மேலும் கடந்த ஜூலை 29ம் தேதி 'பியார் பிரேமா காதல்' படத்தின் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றது.

முன்னதாக வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்தார்கள். திமுக தலைவர் கருணாநிதி மறைவானதால், படத்தை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் இன்று காலை முதல் அனைத்து திரையில் வெளியிடப்பட்டுள்ளது. பியார் பிரேமா காதல் படத்தை பார்த்தவர்கள் டிவிட்டரில் கூறியிருப்பதாவது,