Loneliness Symptoms And Cure : நம்மை சுற்றி பலர் இருந்தும், பல சமயங்களில் நமக்கு தனிமையாக இருப்பது போல தோன்றும். ஏன் இப்படி தோன்றுகிறது? இதனால் ஏதாவது பிரச்சனையா? மனநலனை பார்த்துக்கொள்வது எப்படி? இது குறித்து இங்கு பார்ப்போம்.
உணர்ச்சி ரீதியான அறிகுறிகள்:ச
பிறருடன் இருந்தாலும், சோகம், வெறுமை அல்லது தனிமை உணர்வு போன்ற உணர்வுகள் ஏற்படும்.
உடல் ரீதியான அறிகுறிகள்:
தூக்கம் கெட்டுப்போகும், இன்சோம்னியா போன்ற தூக்க நோய் ஏற்படலாம். உடல் வலி மற்றும் சோம்பேறித்தனம் ஆகியவை மேலோங்கலாம்.
சமூக தொடர்பு:
யாருடனும் பேச பிடிக்காது. கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல பயமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச பிடிக்காமல் போகும். கூட்டத்துடன் இருந்தாலும் அதற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருக்கும்.
சுய விமர்சனம்:
உங்களை பற்றி உங்களுக்கே அதிகமான சந்தேக உணர்வு ஏற்படும். உங்களிடம் உங்களால் நெகடிவாக மட்டுமே பேசிக்கொள்ள முடியும். உங்களை பற்றிய ஒரு நல்ல விஷயம் கூட உங்களுக்கு தோன்றாது.
தூண்டுதல் இன்றி இருப்பது:
உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு கூட உங்களுக்கு தூண்டுதல் இல்லாமல் இருக்கலாம்.
அதிகமாக சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவது:
நாள் முழுவதும் சமூக வலைதளம், இணையதளத்தில் பொழுதை கழிப்பீர்கள். பிறருடன் நேரில் பேசாமல் இருக்க, இதை செய்வீர்கள்.
உறவுகள் குறித்த ஏக்கம்:
யாருடனாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே இருக்கும். உங்கள் எதிரே யாரேனும் நல்லுறவில் இருந்தால் அவர்கள் மீது பொறாமை அல்லது ஏக்க உணர்வு ஏற்படலாம்.
கைமீறும் உணர்ச்சிகள்:
ஒரு சில நேரங்களில், உங்கள் உணர்வுகள் என்ன சொல்கிறது என்பது உங்களுக்கே தெரியாமல் இருக்கும். அதை உங்களால் கையாள முடியாமல் இருப்பது போல தோன்றலாம்.
கவனச்சிதறல்:
எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால், நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளும் கூட தள்ளிப்போய் கொண்டே இருக்கலாம்.
தேவையற்ற கோபம்:
திடீரென அனைத்து விஷயங்களின் மீதும் கோபமும் வெறுப்புணர்வும் உண்டாகலாம். உங்களை யாருமே புரிந்து கொள்ளாதது போல அல்லது தவறாக புரிந்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படலாம்.
சமாளிப்பது எப்படி?
>நண்பர்கள், தெரிந்த வட்டங்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் உரையாடலாம். தனியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் போது, யாருக்கேனும் போன் செய்து பேசலாம்.
>புதிதாக ஏதேனும் விஷயத்தை கற்றுக்கொள்ளலாம். இது, உங்களுக்கு புதிய பாதைக்கான வழியை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
>சின்ன சின்ன விஷயங்களை செய்து முடித்து அதில் வெற்றி பெறலாம், மகிழ்ச்சி அடையலாம்.
>உங்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் செலுத்திக்கொள்ளுங்கள். சரியான உணவை சாப்பிட்டு, சரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
>நெகடிவான தருணங்களில், உங்களை நீங்களே அதிகமாக திட்டிக்கொள்ளாமல் குழந்தையிடம் பேசுவது போல பேசுங்கள்.
>மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரை அணுகி, இதற்கான வழிமுறைகள் என்ன? இதிலிருந்து மீள்வது எப்படி? என்று கேட்கலாம்.
>புதிதாக ஒரு உறவு வேண்டும் என்று நினைப்பதற்கு பதிலாக, ஏற்கனவே கையில் இருக்கும் உறவுகளை தொலைத்து விடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மன அழுத்தத்தை ஓட விரட்ட... சில உணவுகளும் - பழக்கங்களும்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ