வாழ்க்கையில் வெற்றி பெற யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆனால், சிலருக்கு வெற்றி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. சிலரோ அதை எளிதில் எட்டிப் பிடித்து விடுகிறார்கள். நம் வாழ்க்கை முழுவதும் நாம் எவ்வாறு இருக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறி நமது மாணவ பருவத்திலேயே நமக்கு தெரிந்து விடுகிறது. அதனால்தான், ஒருவரது வாழ்வின் மிக முக்கியமான பருவமாக மாணம பருவம் பார்க்கப்படுகின்றது.
எந்த ஒரு மாணவர் வாழ்க்கையில், கடினமாக உழைத்து, அனைத்து பாடங்களையும் ஒழுக்கத்துடன் படித்து பெரியவர்களை மதித்து நடக்கிறாரோ, அவர் கண்டிப்பாக எப்போதும் தனது வாழ்க்கையில் வெற்றியைப் (Success) பெறுவார் என்று சாணக்யரின் சாணக்ய நீதியில் கூறப்பட்டுள்ளது.
கீதையில், கிருஷ்ணர் (Lord Krishna) குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனிடம் கடினமாக உழைப்பவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்று கூறுகிறார். கடின உழைப்பாளிகள் மட்டுமே வெற்றியை அடைகிறார்கள். எனவே, யாரும் எப்போதும் கடினமாக உழைப்பதில் இருந்து பின்வாங்கக்கூடாது.
மாணவர் காலத்தில் கடினமாக உழைக்கும் ஒரு மாணவன் ஒவ்வொரு குறிக்கோளையும், இலக்கையும் அடையும் திறன் படைத்தவனாக மாறுவதாக அறிஞர்கள் நம்புகிறார்கள். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், சில விஷயங்களை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
ஒழுக்கத்தைப் பின்பற்றுங்கள்
சாணக்யரின் கூற்றுப்படி, ஒழுக்கம் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி இல்லை. நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களைப் பார்த்தால், அவர்கள் கடுமையான ஒழுக்கத்தைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள். சோம்பலால் சூழப்பட்ட மக்கள் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டி இருக்கிறது. எனவே, வாழ்க்கையில் கடுமையான ஒழுக்கத்தை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
ALSO READ: Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று
தவறான நட்பு மற்றும் சூழலிலிருந்து விலகி இருங்கள்
இள வயதில்தான் சரியான வாழ்க்கைக்கும், வெற்றி அல்லது தோல்விக்கும் அடித்தளம் அமைகிறது. சரியான நட்பு என்பது மாணவர் வாழ்க்கையில் மிக அவசியமான ஒன்றாகும். இள வயதில் அனைவரது மனமும் தீய விஷயங்களை நோக்கி செல்வது இயல்புதான். ஆனால், அதில் ஒருவர் கவனமாக இருந்து ஒழுக்கத்தை கடைபிடித்து, நன்மை தீமைகளை சரியாக பகுத்தரிய வேண்டும். மாணவர்கள் அனைத்து வகையான தவறான விஷயங்களிலிருந்தும் மோசமான நட்பிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். ஏனென்றால் அவை அனைத்தும் நம்மை இலக்கிலிருந்து விலக்கிவிடும்.
அறிவைப் பெறவும் வளர்த்துக்கொள்ளவும் எப்போதும் தயாராக இருங்கள்
சாணக்யரின் கூற்றுப்படி, ஒரு நபர் எப்போதும் அறிவைப் பெற தயாராக இருக்க வேண்டும். ஓர் இடத்தில் நமக்கு ஞானம் கிடைக்கிறதென்றால், அறிவு விஸ்தாரப்படுகிறதென்றால், அந்த இடத்தின் நிலைமையை நாம் மதிப்பிடக்கூடாது. நமக்கு அறிவை அளிக்கும் அனைத்து இடங்களும் உயர்ந்த இடங்களே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யாரிடம் வேண்டுமானாலும் அறிவாற்றல் இருக்கலாம். ஆர்வமும் விடா முயற்சியும் தான் நாம் அறிவைப் பெற காட்ட வேண்டிய முக்கிய விஷயங்களாகும்.
மாணவப் பருவத்தில் இப்படிப்பட்ட முக்கியமான நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால், நம் வாழ்க்கையின் அடித்தளம் உறுதியாகவும் நல்ல முறையிலும் அமையும். அடித்தளம் ஆணித்தரமான அமைந்து விட்டால், வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதை யாராலும் தடுக்க முடியாது!!
ALSO READ: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR