Rasipalan September 17: புரட்டாசி முதல் நாள் இன்றைய ராசிபலன்

சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்    

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 17, 2021, 06:04 AM IST
Rasipalan September 17: புரட்டாசி முதல் நாள் இன்றைய ராசிபலன் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.  

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...   

ராசிபலன் - 17-09-2021

மேஷம்: உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் செய்வீர்கள். கால்நடைகள் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும்.

ரிஷபம்: உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனை தொடர்பான முயற்சிகள் மேம்படும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்: கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆபரணங்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். வாக்குறுதிகளை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எண்ணிய சில செயல்கள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். தன நெருக்கடிகளினால் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும்.

கடகம்: புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

சிம்மம்: எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கன்னி: குழந்தைகளின் வழியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவின் மூலம் ஆதாயமடைவீர்கள். வியாபார பணிகளில் பொருள் வரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.

Also Read | Panchangam: இன்றைய பஞ்சாங்கம்: 2021 செப்டம்பர் 17, புரட்டாசி முதல் நாள்

துலாம்: தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். புதிய முயற்சிகளுக்கேற்ப சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.

தனுசு: தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

மகரம்: வர்த்தக பணிகளில் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.

கும்பம்: நெருக்கமானவர்களின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

மீனம்: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்பாடுகளின் மீது ஈடுபாடு உண்டாகும்.

Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News