சுக்கிரன் பெயர்ச்சி 2022: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், தொட்டது துலங்கும்

Venus Transit: சுக்கிரன் தனது ராசியை மாற்றுவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 27, 2022, 11:05 AM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும்.
  • வேலையில் வெற்றி பெறுவீர்கள்.
  • கும்பம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி 2022: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், தொட்டது துலங்கும் title=

சுக்கிரன் பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் கிரகம் இன்று அதாவது 27 ஏப்ரல் 2022 அன்று மீன ராசிக்குள் நுழைகிறது. சுக்கிரன் பணம், புகழ், மகிழ்ச்சி, காதல் மற்றும் செல்வம் ஆகியவற்ருக்கான கிரகமாகும். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுபஸ்தானத்தில் இருப்பது நிதி செழிப்பையும் வசதியான வாழ்க்கையையும் அளிக்கிறது. மீனத்தில் சுக்கிரனின் பிரவேசம் சிலருக்கு நல்ல பலனையும் சிலருக்கு தீமையையும் தரும்.

சுக்கிரன் தனது ராசியை மாற்றுவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை அளிக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் சாதகமாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்- வியாபாரம் செய்யும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்கள் இப்போது வேலையை மாற்றாமல் அதே வேலையில் இருந்தால், பதவி உயர்வு மற்றும் சம்பளவு உயர்வு பெற வாய்ப்பு உண்டு. முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படலாம். இலக்கை நோக்கி கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

கடகம் - பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். முதலீடு செய்யலாம். விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலுக்கு சரியான நேரம் இது. இன்னும் பொறுமையாக வேலை செய்யவது நல்லது. சில வேலைகள் தடைபடலாம். தேவையில்லாமல் பணத்தை வீணாக்காதீர்கள், புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். கூட்டுத்தொழில் நன்மை தரும்.

மேலும் படிக்க | ஏழரை சனியில் இருந்து தனுசு ராசிக்கு விடுதலை, சிறப்பு பலன் கிடைக்கும் 

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பாராட்டுகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணம் ஆகாதார்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். 

துலாம் - வருமானம் அதிகரிக்கும் ஆனால் செலவும் அதிகரிக்கும். ஆகையால் சிக்கனமாக இருக்க வேண்டிய காலம் இது. தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளலாம். காயம் ஏற்படலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மரியாதையை கொடுக்கும். நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த பணம் வந்து சேரும். நம்பிக்கை அதிகமாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரம். முதலீடு தவிர்க்கப்பட வேண்டும்.

தனுசு - தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். இது வரை நீங்கள் திட்டமிட்டு இருந்த பல விஷயங்கள் தற்போது நடந்துவிடும். பணி மாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. 

மகரம் - வருமானம் அதிகரிக்கும். பண ஆதாயம் நிதி நிலைமையை பலப்படுத்தும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். பதவி உயர்வு பெறலாம். வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாக இருக்கும்.

கும்பம் - கும்பம் ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். குடும்பம் வாழ்க்கை வியாபாரம் தொடர்பான சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். காதல் வாழ்க்கைக்கு நல்ல நேரம் இது. பல சாதனைகளை இந்த காலத்தில் செய்து முடிப்பீர்கள். 

மீனம் - மீன ராசிக்காரர்கள் அற்புதமான வேலைகளைச் செய்வார்கள், அதற்கான பலன்களையும் பெறுவார்கள். புதிய வேலை கிடைக்கலாம். குறிப்பாக அரசு வேலை செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறுவார்கள். மனமகிழ்ச்சியுடன் பல காரியங்களை எளிதாக செய்துவிட முடியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று பதவி உயர்வைப் பெற கடினமாக உழைக்க வேண்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News