மிதுன ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த 3 ராசிகளுக்கு ‘சுக்ர திசை’ தான்

Venus Transit 2022: ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேரும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 15, 2022, 05:17 PM IST
  • எதிர்பாராத பண வரவினால் திக்கு முக்காடி போகலாம்.
  • சுக்கிரன் சஞ்சாரம் உங்களை வெளியூர் பயணம் செய்ய வைக்கும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுன ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த 3 ராசிகளுக்கு ‘சுக்ர திசை’ தான் title=

Venus Transit 2022: ஜோதிடத்தில் சுக்கிரனுக்கு மிக முக்கிய இடம் உண்டு. வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும் போது, அவனுக்கு சுக்ர தசை தான் அடிக்கிறது என பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்க கூடும். சுக்கிரன் கிரகம் ஆடம்பரமான வாழ்க்கை, அதிக அளவிலான பணம், காதல் வாழ்க்கை, இன்பான வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், நிதி நெருக்கடியால் அவதிப்பட நேரிடும். சுக்கிரன் வலுவாக இருக்கும்போது, ​​செல்வம், புகழ், மதிப்பு, மரியாதை என அனைத்தும் வந்து சேருவதைக் காணலாம். 

கிரகங்கள் மற்றும் விண்மீன்கள் நிலைகளில் மாற்றம் வரும் போது, அவை நம் வாழ்வில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகின்றன என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இன்று மிதுன ராசியில் சுக்கிரன் கிரகம் நுழைய உள்ளது. இது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த பலனை கொடுக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | திருமண தடைகள் நீங்கி, விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள்

இன்று ஜூலை 13 ஆம் தேதி, சுக்கிரன் மிதுன ராசியில் நுழைவதால் பலன் பெறப் போகும் ராசிகள்:

கும்பம்:

சுக்கிரன் ஜூலை 13-ம் தேதி மிதுன ராசியில் நுழைவது பல ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். இதில் ஒன்று கும்பம். சுக்கிரனின் சஞ்சாரம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களும் நன்மை அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினருடன் செலவிடுவீர்கள். மொத்தத்தில், இந்த சுக்ர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். 

துலாம்:

ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திடீர் பயண யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெயர்ச்சி காலத்தில், அதிர்ஷ்ட காற்று குறையாமல் வீசும். அதே சமயம் தொழிலில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். திருமண யோகமும் கை கூடும். 

சிம்மம்:

சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பண ஆதாயங்களை தரும். எதிர்பாராத பண வரவினால் திக்கு முக்காடி போகலாம். பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரம் உங்களை வெளியூர் பயணம் செய்ய வைக்கும். பணியில் உங்களின் அர்ப்பணிப்பு உரிய பலன்களைத் தரும். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். வேலை செய்பவர்களுக்கும் பல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெயர்ச்சி காலத்தின் முழு பலனையும் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: சில ராசிகளுக்கு ஆபத்து, சிலருக்கு ஆதாயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News