வேகமாக உடல் எடையை குறைக்கும் ரகசியம்: இந்த உணவுகளை ஊறவைத்து சாப்பிடுங்க

Weight Loss Tips: ஊறவைத்த உணவு வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை எடை இழப்புக்கும் உதவும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2024, 03:01 PM IST
  • பாதாம் பருப்பை ஊறவைத்துதான் சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • பாதாம் பருப்பை ஊறவைப்பது அதை மென்மையாக்கி ஜீரணிக்க எளிதாக்குகிறது.
  • பாதாமில் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
வேகமாக உடல் எடையை குறைக்கும் ரகசியம்: இந்த உணவுகளை ஊறவைத்து சாப்பிடுங்க

Weight Loss Tips: உடல் பருமன் என்பது பலருக்கு உள்ள பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மிகச்சிலரே அதிக உடல் எடையால் உடல் நல கோளாறுகளை எதிர்கொண்டிருந்தனர். ஆனால், வாழ்க்கை முறையும் உணவு முறையும் மாறிவரும் இந்த காலத்தில் பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனை உள்ளது. உடல் பருமன் நமது தன்னம்பிக்கைக்கு கேடு விளைவிப்பதுடன் பல வித நோய்களைக்கும் நுழைவாயிலாக இருக்கின்றது. 

Add Zee News as a Preferred Source

உடல் எடையை குறைக்க (Weight Loss) பலர் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். இதற்கான மருந்துகளை உட்கொள்பவர்களும் உண்டு. ஆனால் இவற்றால் பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். பல வித இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஊறவைத்த உணவுகள்

ஊறவைத்த உணவு (Soaked Food) வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை எடை இழப்புக்கும் உதவும். இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க உங்கள் தினசரி சமச்சீர் உணவு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றுடன் இவற்றையும் சேர்த்தால், மிக விரைவில் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைக்கலாம். எடை இழப்புக்கு நாம் ஊறவைத்து பயன்படுத்தகூடிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் சில ஊறவைத்த உணவுகள்

1. ஆளி விதைகள்: 

ஆளி விதைகளை (Flaxseeds) இரவில் தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் உட்கொள்வது அவற்றின் செரிக்கும் தன்மையை மேம்படுத்துவதோடு பலவித நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களையும் வெளியிடும். ஆளிவிதைகளில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவற்றை உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வோடு இருப்பது மட்டுமல்லாமல், எடையும் விரைவில் குறையும். 

2. சியா விதைகள்: 

சியா விதைகளை (Chia Seeds) தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதால், அவை ஜெல் போன்ற தன்மையை பெறுகின்றன. இதனால் இவை ஜீரணிக்க மிக எளிய உணவாக மாறிவிடுகின்றன. இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆகையால், இவற்றை சாப்பிடுவதால் முழுமையான உணர்வு ஏற்பட்டு அவ்வபோது பசி எடுக்காமல் இருக்கும். தொப்பை கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் இவை நன்மை பயக்கும். 

3. ஓட்ஸ்: 

ஓட்ஸை (Oats) இரவு முழுவதும் ஊறவைப்பது அவற்றின் பைடிக் அமில உள்ளடக்கத்தை உடைக்க உதவும். இதனால் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மேம்படுத்தப்படலாம். ஓட்ஸ்ஸில் நார்ச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இவை கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக வெளியிடுகின்றன. இது நீடித்த ஆற்றலை வழங்குகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் படிக்க | மேக்-அப் போடாமலேயே மேனகையாய் ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்

4. கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகள்: 

கொட்டைகள் மற்றும் பருப்பு வகைகளை (Legumes) இரவில் ஊறவைப்பதால் அவற்றை சமைக்க ஆகும் நேரம் குறைகிறது. ஊறவைத்த பருப்பு வகைகள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. பருப்புகள் தாவர அடிப்படையிலான புரதங்களாகும். இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நமக்கு முழுமையான உணர்வை அளிக்கின்றது. இதனால் அவ்வப்போது பசி எடுக்காமல் இருக்கும். இதன் காரணமாக நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. 

5. பாதாம்:

பாதாம் பருப்பை (Almonds) ஊறவைத்துதான் சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பாதாம் பருப்பை ஊறவைப்பது அதை மென்மையாக்கி ஜீரணிக்க எளிதாக்குகிறது. பாதாமில் பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை ஏராளமாக உள்ளன. இதை சரியான அளவில் உட்கொண்டால் எடையை குறைக்க உதவும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2 வாரத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்க வேண்டுமா, அப்போ இப்படி பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News