PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!!

வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் வருமான வரி செலுத்துவது மற்றும் கடன் பெறுவது வரை அனைத்துக்கும் PAN கார்டு கட்டாயமாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2020, 12:00 PM IST
  • PAN கார்டை வருமான வரித் துறை வெளியிடுகிறது.
  • வருமான வரித் துறையிலிருந்து உடனடி பான் கார்டைப் பெற 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சுமார் 6.7 லட்சம் பேருக்கு உடனடி PAN உருவாக்கப்பட்டு வழஙப்பட்டுள்ளது.
PAN Card பெற பத்தே நிமிடங்கள் போதும்: இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்!! title=

புதுடில்லி: PAN கார்டு (PAN Card) இப்போது நம் வாழ்வில் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் வருமான வரி செலுத்துவது மற்றும் கடன் பெறுவது வரை அனைத்துக்கும் PAN கார்டு கட்டாயமாகும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இன்னும் PAN கார்டு உருவாக்கவில்லை என்றால், இங்கே உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. இப்போது நீங்கள் பத்து நிமிடங்களுக்குள் PAN கார்டைப் பெற்று விட முடியும். அதன் முறையும் மிகவும் எளிதானது. விரைவான முறையில் PAN கார்டை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

PAN கார்டில் 10 இலக்க எண் உள்ளது. இதை வருமான வரித் துறை (Income Tax Department) வெளியிடுகிறது. வீட்டிலிருந்து ஒரு PAN கார்டை எவ்வாறு பெறுவது என்பதை இப்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

ALSO READ: ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால் உடனடியாக ஒப்படையுங்கள்.. இல்லையெனில் ரூ. 10,000 அபராதம்

PAN கார்டை இலவசமாகப் பெறுவதற்கான வழிமுறைகள்:

1.முதலில், https://www.incometaxindiaefiling.gov.in/home க்குச் செல்லவும்.

2. உங்கள் இடது பக்கத்தில், Instant PAN through Aadhaar என்ற ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு நீங்கள் Get New PAN என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். இதை கிளிக் செய்யவும்.

4. இப்போது புதிய பக்கத்தில், உங்கள் ஆதார் அட்டை எண்ணை (Aadhaar Card Number) உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் ஆதார் எண்ணை இங்கே உள்ளிட்டு 'I Confirm’ என்று டிக் செய்யவும்.

5. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசியில் OTP வரும். அதை தளத்தில் உள்ளிட்டு verify செய்யவும்.

6. வெரிஃபிகேஷன் ஆன உடனேயே உங்களுக்கு ஈ-பான் (E-PAN) வழங்கப்படும்.

7. இதில், விண்ணப்பதாரர் PAN கார்டின் நகலை pdf வடிவத்தில் பெறுகிறார். அதில் கியூஆர் குறியீடு (QR Code) இருக்கும். இந்த QR குறியீட்டில், விண்ணப்பதாரரின் முக்கிய புள்ளிவிவரங்களும் புகைப்படமும் இருக்கும்.

வருமான வரித் துறையிலிருந்து உடனடி பான் கார்டைப் பெற 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை, சுமார் 6.7 லட்சம் பேருக்கு உடனடி PAN உருவாக்கப்பட்டு வழஙப்பட்டுள்ளது. 

ALSO READ: இந்த 5 வழிகளில் Tax saving செய்துகொண்டே குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்கலாம்!!

Trending News