சிவகார்த்திகேயனுடன் இணையும் ஆக்‌ஷன் கிங்!!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Updated: Nov 2, 2018, 11:38 AM IST
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஆக்‌ஷன் கிங்!!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இரும்புத்திரை’ படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. 

படத்தின் கதாநாயகி மற்றும் சக நட்சத்திரங்கள் முடிவாகவில்லை. ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ,’ ‘வேலைக்காரன்,’ ‘சீமராஜா’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா தற்போது அவரது அடுத்து படத்தை பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில், அர்ஜுன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பலம் பொருந்திய ஒரு வில்லனும் பங்கேற்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.