கர்ணன் டீசர் எப்போ? தகவல் சொன்ன நடிகர் தனுஷ்

கர்ணன் படம் திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Mar 4, 2021, 04:57 PM IST
  • டிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் கர்ணன் உருவாகியுள்ளது.
  • படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
  • "தி க்ரே மேன்" (The Gray Man) படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் இருக்கிறார்.
கர்ணன் டீசர் எப்போ? தகவல் சொன்ன நடிகர் தனுஷ்

Karnan Movies Teaser: நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கர்ணன் (Karnan) திரைப்படத்தின் டீசர் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்து, படத்தின் நாயகன் தனுஷ் (Dhanush) அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கர்ணன் (Karnan) படத்தில் பாடல் 1, பாடல் 2 (Pandarathi Puranam) என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கர்ணன் படம் திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

ALSO READ |  அட்ரா மேளத்த!! தேனிசை தென்றல் தேவாவின் குரலில் கர்ணன் படத்தின் பாடல்-2 வெளியானது!

தற்போது "தி க்ரே மேன்" (The Gray Man) படத்தின் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) இருக்கிறார். கர்ணன் திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் ஸ்டார் அக்‌ஷய்குமாருடன் சேர்ந்து தனுஷ் நடித்திருக்கும் "அத்ரங்கி ரே" (Atrangi Re) திரைப்படம் ஆகஸ்ட் வெளி வரவுள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் "ஜகமே தந்திரம்" (Jagame Thandhiram) ஓடிடி (OTT) தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ |  ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' Teaser வெளியீடு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News