காமெடி-த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி த்ரில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 11, 2024, 05:41 PM IST
  • ஐஸ்வர்யா ராஜேஷ் புதிதாக ஒரு காமெடி த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்திற்கு சிஸ்டர் என்ற படம் தயாராகியுள்ளது.
  • இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டராக வெளியாகியுள்ளது.
காமெடி-த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!  title=

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்”  எனப்பெயரிடப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர்  ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர்  சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர்  ஆண்டனி ரூபன் ஆகியோர்  இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர். 

மேலும் படிக்க | Vijay Varma: 2வது முறை எவிக்ட் ஆன விஜய் வர்மா! இதுவரை பிக்பாஸில் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,  அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.  இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

 

படத்தின் கதை:

பெரும் பொருட்செலவில்,  அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பொழுது போக்கு திரைப்படமாக, Dwarka Productions சார்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.  ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.  இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மேலும் படிக்க | பொங்கலன்று வெளியாகி ஹிட் அடித்த தமிழ் படங்கள்! இந்த ஆண்டு வெற்றி யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News