மிக்ஜாம் புயல்: சென்னையில் உடைந்த ஏரி..! வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் நாராணயபுரம் ஏரி உடைந்து அதில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2023, 02:22 PM IST
  • சென்னை நாராயண புரம் ஏரி உடைந்தது
  • வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை
  • 4 அடி நீர் சாலையில் தேங்கியது - போக்குவரத்து துண்டிப்பு
 மிக்ஜாம் புயல்: சென்னையில் உடைந்த ஏரி..! வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை title=

வங்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவை சென்னை எதிர்கொண்டிருக்கும் இந்த சூழலில் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் அந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் எல்லாம் குடியிருப்புகளிலும், சாலைகளிலும் தேங்கி அப்பகுதியை வெள்ளக்காடாக மாற்றியிருக்கின்றன. குறிப்பாக சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டது. இதனால் அதில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் வெள்ளமென சூழ்ந்திருக்கிறது.

பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலை முழுவதும் சுமார் 4 அடிக்கும் மேல் வெள்ள நீர் தேங்கியிருக்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் நீர் வரத்து அதிகரிப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் எல்லாம் வெள்ள நீர் புகுந்திருக்கிறது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி நிறுத்தப்பட்ட கார்கள் எல்லாம் பொம்மை கார்களைப் போல் வெள்ள நீர் அடித்துச் சென்றது. 

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பின்போது இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோன்றதொரு நிலையே மிக்ஜாம் புயல் மழையின்போதும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகளிலேயே இடுப்பளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாது. கடைகள் எல்லாம் மூடப்பட்டிருப்பதால் பால் பாக்கெட், பிஸ்கட் வாங்குவதிலும் அப்பகுதியில் சிரமம் உள்ளது. அதேநேரத்தில் பள்ளிக்கரணை ஏரி உடைந்த பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீர் உடனடியாக வெளியேற்றுவதற்கான பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் அந்த பணியை விரைவாக மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாராயணபுரம் ஏரி உடைந்ததால் தேங்கியிருக்கும் வெள்ள நீர் வடிய நாளை காலை ஆகும் என தெரிகிறது. 

மிக்ஜாம் புயலைப் பொறுத்தவரை அதன் கண் பகுதி சென்னையை கடந்து சென்றுவிட்டது. இருப்பினும் இன்று இரவு வரை மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை பெய்வது குறைந்தால் மட்டுமே  மீட்பு பணிகள் எல்லாம் துரிதமெடுக்கும். 

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News