)
Pushpa 2 The Rule Teaser: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிய திரைப்படம் "புஷ்பா தி ரைஸ்". செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த, திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வில்லனாக சுனிலும், முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக ஃபஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே அளவிற்கு இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதனுடன் புஷ்பா 1 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.
கொரோனா பீக்கில் இருந்த சமயத்தில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' படம் 350 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ், மலையாளம், இந்தி, கன்னடத்திலும் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது 'புஷ்பா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
புஷ்பா தி ரூல் டீசர்:
இந்நிலையில் இன்று அல்லு அர்ஜுனின் (Allu Arujn) பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 அதாவது "புஷ்பா தி ரூல்" (Pushpa The Rule) திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் நடிகர் அல்லு அர்ஜுன் Gangamma Thalli லுக்கில் சேலை கட்டி இருப்பதை காண முடிகிறது. மேலும் டீசரில் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
I thank each and everyone of you for the birthday wishes! My heart is full of gratitude. Please take this teaser as my way of saying thank you! https://t.co/fZQDGYNlWb#Pushpa2TheRule
— Allu Arjun (@alluarjun) April 8, 2024
#Pushpa2TheRuleTeaser out now https://t.co/A2n4hu3oO4
— Mythri Movie Makers (@MythriOfficial) April 8, 2024
Happy Birthday Icon Star@alluarjun
on 15th AUGpic.twitter.com/5xe42ZixBW

புஷ்பா (தி ரூல்) நடிகர், நடிகைகளின் விவரம்:
புஷ்பா 2 திரைப்படத்தில் ராஷ்மிகாவே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் பகத் பாசில், சுனில், அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா லுக்:
முன்னதாக கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ