Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்! எப்போது முதல் தெரியுமா? லோகி கொடுத்த அப்டேட்..

Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை வெளியாகியிருக்கிறது.

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2024, 07:11 PM IST
  • கூலி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
  • எப்போது முதல் தெரியுமா?
  • லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
Coolie : கூலி படத்தின் ஷூட்டிங் ஆரம்பம்! எப்போது முதல் தெரியுமா? லோகி கொடுத்த அப்டேட்.. title=

Coolie Movie : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்டை வெளியாகியிருக்கிறது. இது குறித்து லோகி வெளியிட்டிருக்கும் பதிவில், லுக் டெஸ்ட் முடிந்திருப்பதாகவும் ஜூலை முதல் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் பதிவு:

இந்த போட்டோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கூலி திரைப்படம்:

தமிழில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கி, தற்போது டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால், இவர் இயக்கிய அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை பெற்று பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. இவர், முதன் முதலாக ரஜினிகாந்துடன் கைக்கோர்த்து கூலி படத்தை இயக்க இருக்கிறார். இளம் இயக்குநர்களுடன் கைக்கோர்த்து வரும் ரஜினிகாந்த், புது விதமான பாணியை ஒவ்வொரு படத்திலும் முயற்சித்து வருகிறார். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் படம்தான், கூலி. இந்த படம் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்க காரணம், ரஜினி-லோகியின் கூட்டணிதான். 

தெறிக்கவிட்ட டைட்டில் வீடியோ!

கூலி படத்தின் டைட்டில் வீடியோ, சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில், ரஜினிகாந்தின் சண்டை காட்சிகளும், இவர் பழைய படத்தில் ஏற்கனவே பேசியிருந்த  “சோறுண்டு சுகமுண்டு..” டைலாக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அது மட்டுமன்றி, கூலி படத்தில் ரஜினியின் வயதை குறைத்து காண்பிப்பதற்காக டீ-ஏஜிங் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

லோகி-ரஜினியின் கூட்டணி வெற்றி பெருமா?

லோகேஷ் கனகராஜ், இதுவரை தமிழில் மாநகரம் முதல் லியோ படம் வரை 5 படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். அதில் அனைத்துமே சூப்பர் ஹிட் படங்களாகும். குறிப்பாக விஜய்யை வைத்து இயக்கியிருந்த மாஸ்டர் மற்றும் லியோ படங்கள் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமன்றி வசூலையும் குவித்தது. அதே போல, ரஜினியுடன் இவர் இணைந்திருக்கும் இந்த படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படம், ஒரு கேங்க்ஸ்டர்-ஆக்‌ஷன் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ரஜினியின் கூலி படத்திற்கு 60 கோடி சம்பளம் வாங்கியுள்ள லோகேஷ் கனகராஜ்!

ஸ்டைலாக காட்சியளிக்கும் ரஜினி:

ரஜினிகாந்த் என்றாலே ஸ்டைல்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால், ஒரு சில படங்களில் வயதான ரஜினியை இளமையாக காண்பிக்கிறேன் எனக்கூறி முகத்தை சமயங்களில் கொடுமைப்படுத்தி வைத்திருப்பர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ரஜினி, வயதான தோற்றங்களில் மட்டுமே சமீபத்திய படங்களில் தோன்றி வருகிறார். வயதானவர் தோற்றம் என்றாலும், ரஜினிக்கு அதற்கு ஏற்ற பவர்ஃபுலான கதைகளாகவே அமைந்து விடுகின்றன. உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான ஜெயிலர் படத்தில், மாஸ்-கிளாசாக தோற்றமளித்தார். அதே போல, கூலி படத்திலும் அதை விட ஸ்டைலான தோற்றத்தில் வருவார் என்பது, இன்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 

மேலும் படிக்க | ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News