Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் காரில் சென்று கொண்டிருக்க வேலு ஏற்பாடு செய்த வேன் அவனை கொல்ல வேகவேகமாக வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சுடர் எழிலை காப்பாற்ற ஆட்டோவில் பின்தொடர்ந்து வர வேன் எழில் கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி ஆச்சு, அவன் எனக்கு போன் பண்ணி இருந்தான் என்று அழுகிறாள்.
விஷயம் அறிந்து ஹாஸ்பிடல் வந்த மனோகரி உன்னால் தான் எழிலுக்கு இந்த நிலைமை, உன்ன சும்மா விட மாட்டேன் என்று சத்தம் போட கனகவல்லி எழிலுக்கு இப்படி நடந்ததுக்கு அவ என்ன பண்ணுவா என்று கேள்வி கேட்க இவளால் தான் அந்த வேலுவால் பிரச்சனை வருது, பார்க்க வேண்டியவர்களை பார்த்து வந்து உன்ன வசிக்கிறேன் என்று கோபப்பட்டு கிளம்பி செல்கிறாள்.
மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு
சுடர் எழிலுக்கு எதுவும் ஆக கூடாது என்று பதற மறுபக்கம் மனோகரி வேலுவை சந்தித்து நீ எதுக்கு எழிலை கொல்ல பார்க்குற, அந்த சுடரை என்ன வேணா பண்ணிக்க, ஆனால் என் எழில் மேல கையை வச்சா உன்ன சுட்டு தள்ளிடுவேன் என்று துப்பாக்கி முனையில் மிரட்டுகிறாள். வேலு உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா என்று பிளாஷ்கட்டை ஓபன் செய்ய மனோகரி பற்றிய விஷயங்களை போட்டு உடைக்கிறான் வேலு.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய்: சீரியலை எங்கு பார்ப்பது?
நினைத்தேன் வந்தாய் சீரியல் 2024 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | KS ரவிக்குமார் மற்றும் விக்ரமன் என்வாழ்வில் முக்கியமான நபர்கள் - சரத்குமார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ