இயக்குனர் ஹெச்.வினோத் தனது முதல் படமான 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலமே அதிக ரசிகர்களை கவர்ந்தவர், இந்த படம் நேர்மறையான விமரசனங்களை பெற்று பலரையும் ரசிக்க செய்தது. இந்த வெற்றி படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தையும் இயக்கினார், இந்த படமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்த படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. அடுத்ததாக அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கினார், இந்த படம் சமூக கருத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது. இவர் இயக்கத்தில் வெளியான இந்த மூன்று படங்களும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மேலும் படிக்க | 'வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து ஹெச்.வினோத் மீண்டும் அஜித்துடன் இணைந்த 'வலிமை' படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் திரையில் வெளியாகிய மூன்றே நாட்களில் நூறு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது இருக்கிறது. இரண்டு முறை அஜித்-வினோத் வெற்றி கூட்டணி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக 'ஏகே61' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் போனி காப்பூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ம் தேதி ஹைதராபாத்தின் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான செட்டில் நடத்தப்படவுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஹெச்.வினோத், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகப்போகும் இந்த படம் ஆகஸ்டில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த முக்கியமான தகவல் என்னவென்றால் இதில் இரண்டு கதாநாயகிரகள் நடிக்கவுள்ளனர், அதில் ஒரு கதாநாயகனாக விஜய் சேதுபதியும், மற்றொரு கதாநாயகனாக யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படம் குறித்த தெளிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | AK61: அஜித்துடன் நடிக்கப்போகும் பிக்பாஸ் பிரபலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR