மீனாட்சி பொண்ணுங்க: ஷக்திக்கு பூஜா விட்ட சவால்... நடக்க போவது என்ன?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2023, 12:30 PM IST
மீனாட்சி பொண்ணுங்க:  ஷக்திக்கு பூஜா விட்ட சவால்... நடக்க போவது என்ன?  title=

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல்.

மீனாட்சி பொண்ணுங்க : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பூஜாவுக்கு வெற்றியுடன் கல்யாணம் நடக்க ஷக்தி வெறுப்பேற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சக்தியும் வெற்றியும் பூஜாவுக்கு முதலிரவு அறையை அலங்காரம் செய்ய சரளாவும் பூஜாவும் பாலில் மயக்க மருந்து கலக்க திட்டம் போடுகின்றனர்.

மேலும் படிக்க | காமெடி நடிகருக்கு தீண்டாமை கொடுமை..? கொதித்து போன நெட்டிசன்கள்-விளக்கம் கொடுத்த நடிகர்!

மறுநாள் சக்தி பூஜாவிடம் ரோகித்துக்கு பாலில் மயக்க மருந்து கலந்தது எனக்குத் தெரியும் என்று சொல்லி ஷாக் கடுப்பாகிறாள். மேலும் மறுநாள் இந்த வீட்டை விட்டு உன்னை அனுப்பி காட்டுகிறேன் என்று பூஜாவும் சக்தியும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்கின்றனர்.
அதனை தொடர்ந்து கோகிலாவும் கனக லிங்கமும் யமுனாவை கொடுமைப்படுத்த யமுனா மீனாட்சி வீட்டிற்கு வர அங்கே வந்த சக்தி யமுனா சோகமாக இருப்பதை பார்த்து விசாரிக்க யமுனா ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்ப, உன் மாமியார் கோகிலா கொடுமைப்படுத்தினாளா என்று கேட்க, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மீனாட்சி பொண்ணுங்க: : சீரியலை எங்கு பார்ப்பது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News