'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேகா “தானா சேர்ந்த கூட்டம்” ?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”.

Last Updated : Dec 3, 2017, 12:06 PM IST
'ஸ்பெஷல் 26' படத்தின் ரீமேகா “தானா சேர்ந்த கூட்டம்” ? title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம் “தானா சேர்ந்த கூட்டம்”.

இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீஸர் 30-ம் தேதி வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தின் முதல் பாடலான "நானா தானா" மற்றும்  ''சொடக்கு மேல சொடக்கு'' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் வெற்றி  பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 30-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது. படத்தின் டீசரில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து இருந்த `ஸ்பெஷல் 26' அடையாளங்கள் தெரிகிறது. 2013ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கத்தில் ஹிந்தியில் வந்த படம் 'ஸ்பெஷல் 26'.

டீசரில் சில மாறுதல்கள் தென்பட்டாலும் சில கதாபாத்திரங்கள், காட்சிகள் 'ஸ்பெஷல் 26' படத்தில் வரும் காட்சிகள் போலவே தென்படுகிறது. 

ஹிந்தியில் வந்த ஸ்பெஷல் 26 படம் 1987-ம் வருடம் நடந்த தொடர் போலி சிபிஐ ரைடுகளை அடிப்படியில் எடுக்கப்பட்டது. 

Trending News