பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் தேதி? இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா விஜய்?

நடிகர் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 20 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2022, 01:31 PM IST
  • பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் எப்போது?
  • விரைவில் அறிவிக்கிறது சன்பிக்சர்ஸ்
  • மார்ச் 20 ஆம் தேதி நடைபெறலாம் என தகவல்
பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் தேதி? இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவாரா விஜய்? title=

மாஸ்டர் திரைப்படத்துக்குப் பிறகு இளைய தளபதி நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | "தளபதி 66" அரசியல் சார்ந்த படமா? இயக்குனர் வம்சி விளக்கம்!

ஆனால், அந்த தேதியில் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனென்றால், ஏப்ரல் 14 ஆம் தேதி கே.ஜி.எஃப் சாப்டர் 2 ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் பார்ட் 1 ஆக்ஷன் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், இரண்டாவது படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சபட்சமாக இருக்கிறது. கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் ஏற்கனவே பலமுறை தள்ளிபோய் இருப்பதால், ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதில் திட்டவட்டமாக இருக்கின்றனர். அதனால், பீஸ்ட் படம் வெளியாகுமா? அல்லது கேஜிஎப் உடன் பாக்ஸ் ஆஃபீஸில் மோதுமா? என்பது குறித்து உறுதியாக சொல்ல முடியவில்லை. 

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ ரீலிஸ் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி பீஸ்ட் ஆடியோ ரீலிஸ் நிகழ்ச்சி நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சர்க்கார் மற்றும் மாஸ்டர் என விஜய்யின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகள் எப்போதும் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். அதைப்போலவே பீஸ்ட் படத்த்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிப்பை விரைவில் சன்பிக்சர்ஸ் அறிவிக்க உள்ளது. கேஜிஎப் 2-க்கான புரோமோஷன் பணிகள் நடைபெறும் சூழலில் அதே தேதியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் புரோமோஷன் பணிகளும் தொடங்க வேண்டிய கட்டாயம் படக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதால், பீஸ்ட் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக எந்நேரமும் அறிவிக்கப்படலாம். ரசிகர்களுக்கு அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாஸ்டர் பட ஆடியோ ரிலீஸில் குட்டி ஸ்டோரிக்கும் விஜய் டான்ஸ் ஆடியது போலவே, பீஸ்ட் படத்தில் ஏற்கனவே ரிலீஸாகி மெகா ஹிட்டாகியிருக்கும் அரபிக் குத்து பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆடுவாரா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரபிக் குத்து பாடல் யூ டியூப்பில் மட்டும் இதுவரை 125 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 

மேலும் படிக்க | பச்சிளம் குழந்தை முதல் பாலைவனம் வரை: தெறிக்கும் அரபிக்குத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News