ஓடிடி சார்ட்டில் முதலிடம் - அசத்தும் ஜான்வி கபூர்

ஜான்வி கபூரின் சமீபத்திய வெளியீடான ‘மிலி’ ஓடிடி சார்ட்டில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது

Written by - க. விக்ரம் | Last Updated : Jan 4, 2023, 01:13 PM IST
  • ஜான்வி கபூர் நடிப்பில் மிலி வெளியாகியுள்ளது
  • நெட்ஃப்ளிக்ஸில் ரசிகர்கள் பெரும் வரவேற்பு
  • ஜான்வியின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது
ஓடிடி சார்ட்டில் முதலிடம் - அசத்தும் ஜான்வி கபூர் title=

சினிமாத்துறையில் ஒருவர் தரும் கடின உழைப்பு என்றும் வீண் போகாது என்பதற்கு உதாரணமாக நடிகை ஜான்வி கபூரின் உழைப்பும் அவரது சமீபத்திய திரைப்படங்களின் தேர்வும் இருக்கிறது என பாராட்டுகள் குவிந்துவருகின்றன. சவாலான கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையில் நடிப்பதற்கு ஜான்வி கபூர் எப்போதும் தயங்கியதும்  கிடையாது, அதுபோன்ற படங்களை அவர் தவிர்த்ததும் கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது, தன்னுடைய சமீபத்திய படமான ‘மிலி’யில் மீண்டும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். 

சர்வைவல் ட்ராமாவாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிய ‘மிலி’ கதை பார்வையாளர்களையும் சினிமா ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஜான்வி கபூரின் திறமையான நடிப்புக்கும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது.

பார்வையாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து ‘மிலி’ திரைப்படம் இந்தியன் ஓடிடி டொமைனில் முதல் இடத்தையும், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் உள்ளது.  

‘குட் லக் ஜெர்ரி’- ஒரு டார்க் காமெடி, ‘ரூஹி’- ஹாரர் காமெடி, ‘குன்ஜன் சக்சேனா’- பயோகிராஃபிகல் ட்ராமா மற்றும் ‘மிலி’- சர்வவைல் ட்ராமா என தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக தனது நடிப்புத் திறமைக்கு சவால் விடுக்கும் கதாபாத்திரங்களையே ஜான்வி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஜான்வியின் கடின உழைப்பு மற்றும் கொடுத்த முயற்சிகள் அனைத்தும் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருகிறது என்பதைக் கண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

மேலும் படிக்க | நஷ்டத்தை ஈடுகட்ட இந்த தயாரிப்பாளருடன் மீண்டும் இணைந்த கமல்!

மேலும் படிக்க | பிரம்மாண்டங்களை இறக்கும் கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம்! ரூ.3000 கோடி ரெடி

மேலும் படிக்க | தளபதி 67 படத்தின் சூட்டிங் தொடங்கியது! எங்கே தெரியுமா? பிரபல நடிகர் கொடுத்த அப்டேட்

மேலும் படிக்க | அடுத்தடுத்து லீக் ஆன தளபதி 67 அப்டேட்..! என்ன இப்படி ஆகிடுச்சு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News