)
Actor TVK Leader Vijay Birthday Wishes To Modi Periyar : தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக வலம் வரும் நடிகர் விஜய். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய், தற்போது சமூகத்தில் ஏற்படும் அனைத்து பெரிய விஷயங்களுக்கும் ரியாகட் செய்து வருகிறது. செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று, பிரதமர் நரேந்திர மோடிக்கும், ‘பகுத்தறிவு தந்தை’ என மக்களால் அழைக்கப்படும் பெரியாருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்தநாள். இந்த நிலையில் விஜய், இவர்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.
முதலில் நரேந்திர மோடிக்கு வாழ்த்து..
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.
Heartfelt birthday greetings to the Hon'ble Prime Minister of India Thiru. @narendramodi Avargal.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
I pray for your good health, happiness, and long life.
விஜய் தெரிவித்துள்ள வாழ்த்தில், ““மரியாதைக்குறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார். இந்த பதிவை, அவர் காலை 9:01ற்கு பதிவிட்டிருக்கிறார்.
இரண்டாவதாக பெரியார்..
தமிழகத்தை பொறுத்தவரை, பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமன்றி சமூகத்தில் மாற்றம் வேண்டும் என எதிர்பார்ப்பவர்களுக்கு முன்னோடியாக பார்க்கப்படுகிறார் பெரியார். இவருக்கு பகுத்தறிவு தந்தை, சீர்திருத்தவாதி, என பல்வேறு பெயர்கள் உண்டு. காலையில் இருந்து, பலர் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர். விஜய்யும் அவருக்கென்று ஒரு பதிவை வெளியிட்டார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024
அதில், “தென்னகத்தின் சாக்ரட்டீஸ், பகுத்தறிவு பகலவன்” என பெரியாரை புகழ்ந்திருக்கும் அவர் அவரது சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என வலியுறித்தி அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவை, விஜய் 10 மணியளவில் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த மக்கள், “முதலில் மோடி..அடுத்ததாக பெரியாரா? என்ன விஜய் இதெல்லாம்?” என்று கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.
மோடியுடன் போட்டோ எடுத்த விஜய்..
நடிகர் விஜய், 2016ஆம் ஆண்டு நரேந்திர மோடி கோயமுத்தூருக்கு அரசியல் பிரச்சாரத்திற்கு சமயத்தில் அவரை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்த எந்த ஆர்வத்தையும் காண்பிக்கவில்லை. அப்படியிருக்கையில், மோடியை சந்திக்க முதன் முதலில் அரசியல் பிரபலம் அல்லாத ஒருவர் வந்திருந்தது அதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு எழுந்த பயம்!
நடிகர் விஜய், அரசியல் கட்சியை ஆரம்பித்த போது தமிழக வெற்றிக்கழகம் கட்சி, எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது என கூறியிருந்தார். மேலும், 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். விஜய், கூட்டணி இல்லை என்று கூறிவிட்டாலும் அவருடன் செட் சேர்வதற்கு பல அரசியல் தலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இதனால், ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் “ஒரு வேள விஜய் பாஜக பக்கம் சாஞ்சிருவாரோ..” என்ற பயம் எழுந்துள்ளது.
விஜய்யின் நல்ல படம் வந்தாலே வன்மத்தை கக்கி வரும் சில வேறு ஸ்டார்களின் ரசிகர்கள், இப்போது விஜய் முதலில் மோடிக்கும் பின்னர் பெரியாருக்கும் விஷ் செய்துள்ளதை இணையதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ