GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா?

Actor Vijay Comment On Yuvan Music : விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாக இருப்பதை ஒட்டி, இதன் தெலுங்கு ப்ரீ-ரலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 3, 2024, 11:01 AM IST
  • 2 நாட்களில் ரிலீஸ் ஆகும் தி கோட் படம்
  • யுவன் இசைக்கு விஜய் விமர்சனம்
  • என்ன சொன்னார் தெரியுமா?
GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையை விமர்சித்த விஜய்!! என்ன சொன்னார் தெரியுமா? title=

Actor Vijay Comment On Yuvan Music : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). இப்படம், விரைவில் வெளியாக இருப்பதை அடுத்து, இப்படம் குறித்த நேர்காணல்களும் ப்ரமோஷன்களும் நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தை பார்த்து விட்டும், யுவன் சங்கர் ராஜாவின் இசை குறித்தும் நடிகர் விஜய் ஒரு விமர்சனத்தை கூறியிருக்கிறார். அது என்ன தெரியுமா? 

தி கோட்:

தி கோட் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இந்திய பகுதிகளை தாண்டி, ரஷ்யா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நடப்பெற்றது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், விஜய்யுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் லைலா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 

தி கோட் படம் டைம் ட்ராவல் கதையா? க்ளோனிங் கதையா? ஆக்ஷன் த்ரில்லரா? என்று யாருக்கும் இன்னும் தெரியவில்லை. இது குறித்து முன்னர் பேசிய வெங்கட் பிரபு, தான் டிரைலரிலேயே படத்தின் ஜானர் என்ன என்பதை கூறிவிட்டதாகவும் யாருமே அதை கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனால், தி கோட் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசை..

வெங்கட் பிரபுவின் படம் என்றாலே, அவற்றில் பெரும்பாலான படங்களுக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருப்பார். இவர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கூட்டணியா, அல்லது இருவரும் இணைந்து வேலை பார்க்கும் படங்கள் ஹிட் ஆகின்றது என்பதால் இந்த கூட்டணியா என்பது யாருக்கும் தெரியவில்லை. தி கோட் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார். 

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் பெரும் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து வெளியான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலும் பெரிதாக பேசப்படவில்லை. மேலும், ஸ்பார்க் மற்றும் மட்ட ஆகிய பாடல்களுக்கு கலவையான விமர்சனஙகள் வந்தன. இதையடுத்து, நடிகர் விஜய்யும் யுவனின் இசைக்கு தன் பங்கு விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். 

மேலும் படிக்க | 50 வயசு விஜய்யா இது? இவ்ளோ அழகா இருக்காறே!! GOAT பட போட்டோக்கள்..

விஜய்யின் விமர்சனம்..

தி காேட் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் நடிகர் விஜய் படத்தை பார்த்ததாக கூறப்படுகிறது. படத்தை பார்த்து முடித்த பின் நடிகர் விஜய் வெங்கட் பிரபுவிடம் “யுவன் பின்னிட்டான்ல..” என்று கூறியிருக்கிறார். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதே போல, இப்பட வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இசையமைப்பாளர் யார் என்பது குறித்து விஜய்யும் வெங்கட் பிரபுவும் பேசியிருக்கின்றனர். அப்போது விஜய், “உன் படம் என்றாலே கண்டிப்பா யுவன்தான் இருக்கனும்..” என்று கூறினாராம். இதையடுத்துதான் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளராக பணியமர்த்தி இருக்கின்றனர். 

Vijay

படத்திற்கு விமர்சனம்..

தி கோட் படத்தை, Final Cut-ற்கு முன்னர் பார்த்திருக்கிறார், நடிகர் விஜய். அப்பாேது, படத்தின் முதல் பாதியை பார்த்து “தெறிக்கிது…” என்று கூறினாராம். மேலும், “உன் கூட இன்னும் ஒரு படம் பண்ணியிருக்கனும்..அவசரப்பட்டுட்டேன்..” என்று வெங்கட் பிரபுவிடமும் கூறினாராம். படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | “அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News