இந்திய படத்தில் நடிக்கும் பிரபல கொரிய நடிகர்! அதுவும் யார் படத்தில் தெரியுமா?

Latest News South Korean Actor Ma Dong Seok Indian Movie : தென் கொரிய நடிகர் ஒருவர், இந்திய படம் ஒன்றில் நடிக்க வருகிறார். அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 8, 2024, 07:15 PM IST
  • இந்தியாவிற்கு நடிக்க வரும் கொரிய நடிகர்
  • யார் இயக்கும் படத்தில்?
  • ஹீரோ யார்?
இந்திய படத்தில் நடிக்கும் பிரபல கொரிய  நடிகர்! அதுவும் யார் படத்தில் தெரியுமா?  title=

Latest News Korean Actor Ma Dong Seok Indian Movie : தென் கொரிய படங்களுக்கும், அந்த நாட்டின் நடிகர்களுக்கும் இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது. K Drama எனப்படும் கொரிய டிராமாக்களுக்கு இந்தியாவில் பெண் ரசிகர்கள் கூட்டம் ஒரு புறம் அதிகமாக இருக்க, இன்னொரு புறம் கொரிய மொழியில் உருவாகும் Gore (ரத்தக்கிளறி) படங்களுக்கு பெரும்பாலான ஆண்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட கோர் மற்றும் கேங்ஸ்டர் படங்களில் நடித்து பிரபலமானவர், மா டோங் சியோக் (Ma Dong-seok). 

யார் இவர்?

Ma Dong-seok, தென் கொரியாவில் வெளியாகும் கேங்ஸ்டர் மற்றும் த்ரில்லர் படங்களில் நடித்து பிரபலமானவர். டிரைன் டு பூசான், தி அவுட்லாஸ் உள்ளிட்ட பல படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர், தொடர்ந்து கேங்ஸ்டர் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் பெரும்பாலானோர் இவரை ரக்கட் ஆன ஆள் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மையில் இவர் மிகவும் சாஃப்ட் ஆனவர் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. தனது மொபைல் பாேன் கவரில் கூட, ஹெலோ கிட்டி பேனல்தான் வைத்திருப்பார். 

இந்திய படத்தில்..

சமீப காலமாக உலக சினிமா கலைஞர்களை இந்திய சினிமாக்களில் நடிக்க வைப்பது வழக்கமாகி வருகிறது. கிராஃபிக்ஸ் கலைஞர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்களை தாண்டி, இப்போது உலக சினிமா நடிகர்களையே இந்திய படத்தில் நடிக்க வைக்க ஆயத்தமாகி வருகின்றனர். பாலிவுட் கதாநாயகர்கள் தமிழ் அல்லது தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதும் தென்னிந்திய நடிகர்கள் இந்தி படங்களில் நடிப்பதும் சகஜம்தான். ஆனால், உலக சினிமா நடிகர்களை நடிக்க வைப்பது புதிய முயற்சியாகும். 

Pradeep Reddy Vanga

யார் படத்தில்? 

அர்ஜுன் ரெட்டி, படத்தை இயக்கி அறிமுகமானவர் பிரதீப் ரெட்டி வங்கா. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரன்பீர் கபூரை வைத்து, அனிமல் படத்தை இயக்கியிருந்தார். நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படம் வசூலை அள்ளுவதில் மட்டும் தவிறவில்லை. இந்த நிலையில்தான், தற்போது இவர் ஒரு புதிய படத்தை இயக்க இருப்பதாகவும் இதில் கொரிய நடிகர் Ma Dong-seokஐ நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பார்டிக்கு சென்ற 30 வயது நடிகை மயங்கி விழுந்து மர்ம மரணம்! இறப்பிற்கு காரணம் என்ன?

ஹீரோ யார்?

பிரதீப் வங்கா இயக்கும் இந்த படத்திற்கு பெயர் ‘ஸ்பிரிட்’ என கூறப்படுகிறது.  இந்த படத்தின் முன்னெடுப்பு வேலைகள் தற்போது நடைப்பெற்று வருவதாகவும் இதில் வில்லன் ரோலில் Ma Dong-seokஐ நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

உலக சினிமா நடிகரை நடிக்க வைக்கலாமா? 

பல்வேறு ஹாலிவுட் கலைஞர்கள் மற்றும் பிற நாட்டு நடிகர்கள் இந்திய சினிமாக்களில் நடித்து வருகின்றனர். அதே போல, இந்திய நடிகர்கள் பலரும் ஹாலிவுட்டில் நடித்து வருகின்றனர். அதனால் இது சகஜம்தான் என சினிமா வரலாறு கொடுக்கிறது. இருப்பினும், படத்தின் கதை மற்றும் பட்ஜெட்டை பொறுத்துதான் வெளிநாட்டு நடிகர்களை இந்திய சினிமாக்களில் நடிக்க வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த 29 வயது நடிகை திடீர் மரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News