ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்!

Meenakshi Ponnunga TV Serial: சக்தி வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று ரங்கநாயகி சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2023, 01:07 PM IST
  • ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி.
  • வெற்றி செய்த விஷயம்.
  • மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்.
ஷக்திக்கு ஷாக் கொடுத்த ரங்கநாயகி - மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. சக்தி வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று ரங்கநாயகி சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சக்தி வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறாள். வெளியில் வந்த ரங்கநாயகி சக்தி வீட்டை விட்டுப் போகவில்லை என்றால் நான் வெளியே போய் விடுகிறேன் என்று சொல்ல, பிறகு சக்தி வீட்டை விட்டு போகிறாள்.  அதை தொடர்ந்து சக்திக்குத் தெரியாமல் வெற்றி அவளுக்கு பாதுகாப்பாக பின்னால் மறைந்து மறைந்து வருகிறான்.இதை ரோகித் பார்த்துவிட்டு கேட்க, சக்தியை நான் வீட்டில் விட்டுவிட்டு வந்தது தெரிந்தால் அம்மா கோபப்படுவார்கள். 

mp

மேலும் படிக்க | ராணி போல் வாழும் ராஷ்மிகா.. மலைப் போல் குவியும் சொத்து, சம்பளம்

அதனால் சக்தியின் பாதுகாப்புக்காக இப்படி பின் தொடர்வதாக கூறுகிறான். பிறகு சக்தி மீனாட்சியின் வீட்டிற்கு செல்கிறாள். இந்த நேரத்தில் ஏன் வந்தாய் என்று மீனாட்சியும் சகோதரிகளும் கேட்க ரங்கநாயகி உங்கள் உடல் நிலையை பார்த்துக் கொள்ளுமாறு அனுப்பியதாக சொல்லுகிறாள்.  மீனாட்சி ரங்கநாயகிக்கு போன் செய்து நன்றி சொல்லலாம் என்று சொல்ல சக்தி சமாளித்தவாறு ரங்கநாயகி தூங்கி இருப்பார்கள் என்று கூறி விடுகிறாள். மேலும் சக்தியின் மீது தவறு இல்லை என்று வெற்றி சொல்ல விழா நடக்கவில்லை என்றால் கெட்டது நடக்கும் என்பதை தெரிந்து சக்தி எக்ஸாமுக்கு போனதை மன்னிக்க முடியாது என்று ரங்கநாயகி கூறுகிறாள்.  

அன்று இரவு ஒரு குடுகுடுப்பைக்காரன் ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று சொல்லிவிட்டு போக பதற்றம் அடைந்த ரங்கநாயகி செல்வமுருகனுடன் விளக்கேற்றி சாமி கும்பிட தீபம் அணைந்து விடுகிறது. இதனால் ரங்கநாயகி பயப்படுகிறார்கள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News