தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா-க்கு ஆண் குழந்தை...

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Nov 14, 2019, 03:43 PM IST
தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா-க்கு ஆண் குழந்தை... title=

தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேரம், ஜிகர்தண்டா, உறுமீன், சாமி 2 போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பவர் பாபி சிம்ஹா. தற்போது கமல் நடிப்பில் உறுவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கும் நடிகை ரேஷ்மி மேனனுக்கும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

உறுமீன் திரைப்படத்தின் போது இருவருக்கும் இடையில் காதல் மலந்து திருமணத்தில் முடிந்தது. திருமணத்தை அடுத்து ரேஷ்மி திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 

இத்தம்பதிக்கு மதுர சிம்ஹா என்னும் இரண்டு வயது குழந்தை இருக்கும் நிலையில் கடந்த நவம்பர் 11 அன்று இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர், நடிகைகள் பலர் ரேஷ்மி மேனனுக்கும், பாபி சிம்ஹாவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவிடுகின்றனர்.

லைகா ப்ரடக்ஷன்ஸ் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் உறுவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் சிம்ஹா, இது தவிற வல்லவனுக்கு வல்லவன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.  இந்தியன் 2 திரைப்படத்தில் சிம்ஹா நகைச்சுவை நடிகர் விவேக் உடன் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News