மலையாள நடிகருடன் திருமணமா? நித்யா மேனன் சுளீர் பதில்

நித்யா மேனன் மலையாள நடிகரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 21, 2022, 07:37 AM IST
  • நித்யா மேனன் விரைவில் திருமணம்
  • மலையாள நடிகரை மணக்கிறாரா?
  • அவரே கொடுத்த விளக்கம் இதுதான்
மலையாள நடிகருடன் திருமணமா? நித்யா மேனன் சுளீர் பதில் title=

மலையாளம், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நித்யா மேனன். தமிழில் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், 180, இஷ்க், ஒக்கடைன், ஜபர்தஸ்த், குண்டேஜாரி கல்லந்தைண்டி, ருத்ரமாதேவி, ஜனதா கேரேஜ், உள்ளிட்ட படங்களில் நடித்து ஸ்டார் நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு மொழியில் அறிமுகமாகியிருந்தாலும், மலையாளம் மற்றும் தமிழிலும் அவருக்கு நல்ல பட வாய்ப்புகள் வந்தது.

மேலும் படிக்க | சமந்தாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு

தமிழில் இப்போது தனுஷூடன் சேர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர், மலையாளத்தில் ஆறாம் கல்பனா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்திருக்கிறார்.இந்த படங்களுக்குப் பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. கைவசமும் படங்கள் இல்லாததால் விரைவில் திருமண பந்தத்தில் இணையலாம் என்ற தகவல் தீயாக பரவியது. மலையாள திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாலேயே நித்யா மேனன் படங்கள் நடிப்பதை நிறுத்திவிடார் என்ற செய்தியும் வெளிவந்தது.

ஆனால், இந்த தகவல்களை முற்றாக மறுத்துள்ளார் நித்யா மேனன். ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், இப்போது திருமண பந்தத்தில் இணையும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார். தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாகவும் நித்யா மேனன் விளக்கம் கொடுத்துள்ளார். அவரின் இந்த விளக்கத்துக்குப் பிறகு நித்யா மேனன் திருமணம் தொடர்பாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News