சமந்தாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு

சமந்தாவின் எதிர்காலம் குறித்து பிரபல ஜோதிடர் தன்னுடைய அடுத்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2022, 07:45 PM IST
  • சமந்தாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
  • பிரபல ஜோதிடரின் கணிப்பு வைரல்
  • 2024 வரை புகழ் வெளிச்சத்தில் இருப்பாராம்
சமந்தாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? பிரபல ஜோதிடர் கணிப்பு title=

சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமணம் குறித்தும், அந்த திருமணம் விவாகரத்தில் முடியும் என்றும் கணித்தவர் ஜோதிடர் வேணு சுவாமி. தற்போது மீண்டும் சமந்தா பற்றி அவர் புதிய கணிப்பை வெளியிட்டிருக்கிறார். 2024 வரை சமந்தாவின் எதிர்காலம் கொடிகட்டிப் பறக்கும் எனக் கூறியுள்ளார். இனி வரும் நாட்களில் அவருக்கு பட வாய்ப்புகளும், அதன் மூலம் பேரும் புகழும் பெருமளவில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கும் சாகுந்தலம் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்று ஜோதிடர் வேணுசாமி தன்னுடைய கணிப்பில் கூறியிருக்கிறார். அவரின் இந்தக் கணிப்பு இப்போது வைரலாகியிருக்கிறது. நாகசைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு விவாகரத்தில் வந்து முடிந்தது. சமாதானத்துக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகொடுக்கவில்லை.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி இடம் இனி சமந்தாவுக்கு... விஜய் படத்தில் இப்படி ஒரு ரோலா?

நாக சைதன்யாவுடனான மணமுறிவுக்குப் பிறகு தீவிரமாக திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் சமந்தா. குறிப்பாக, கவர்ச்சி ரோலில் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். புஷ்பா படத்திற்காக அவர் ஆடிய கவர்ச்சி நடனம், ரசிகர்களின் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை. இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த பாடலாகவும் அந்த பாடல் இருக்கிறது. அடுத்தபடியாக, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, சமந்தா கூட்டணியில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கிய இந்தப் படமும் அவருக்கு பாசிடிவான பெயரைப் பெற்றுக் கொடுத்தது.  

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். சமந்தா நடித்து முடித்திருக்கும் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. யசோதா படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகிவிட்ட நிலையில், சகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர்கள் இன்னும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை. விரைவில் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார் சமந்தா.

மேலும் படிக்க | சமந்தாவை தூக்கிய அக்‌ஷய் குமார் - எங்கு எப்போ தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News