இந்தியன் சினிமா: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி: தி கன்க்லுஷன்" இந்தியாவில் 2017-ல் வெளிவந்தது. ஆனால் இப்படம் இன்னும் உலகளவில் பிரபலமாக உள்ளது. இப்படம் இப்போது ரஷ்ய டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. வியாழக்கிழமை, ரஷ்ய தூதரகம், டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படம் ரஷ்ய தொலைக்காட்சியில், மிகப் பிரபலமாகி வருகிறது என்ற செய்தியை பகிர்ந்து கொண்டது.
இந்த படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு அந்த நாட்டில் ஒரு சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
"இந்திய சினிமா ரஷ்யாவில் பெரும்பாலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது. ரஷ்ய தொலைக்காட்சி இப்போது எதை ஒளிபரப்பப்பிக் கொண்டிருப்பதை பாருங்கள்... ரஷ்ய மொழியில் பாகுபலி!" என @RusEmbIndia, இந்தியாவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனுடனேயே டப்பிங் செய்யப்பட்ட ஒரு காட்சியும் பகிரப்பட்டது.
Indian cinema gains popularity in Russia. Look what Russian TV is broadcasting right now: the Baahubali with Russian voiceover! pic.twitter.com/VrIgwVIl3b
— Russia in India (@RusEmbIndia) May 28, 2020
இரண்டு பகுதிகளாக வந்த படத் தொடர்ச்சியின் இறுதி பாகமான இப்படம் அனைத்து பாக்ஸ் ஆபிஸ் பதிவுகளையும் முறியடித்து. பிரபாஸ் மற்றும் ராணா தகுபதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களுக்காக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டது.
இந்த செய்தியால், இந்தியாவில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த படத்தின் ரஷ்ய கிளிப் வைரலாகிவிட்டது. இந்த பிளாக்பஸ்டர் புராண அதிரடி திரைப்படத்தை ரசித்துப் பார்த்து ஆதரவு அளித்ததற்காக, இந்திய ரசிகர்கள் ரஷ்யாவிற்கும் ரஷ்ய மக்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
"தெலுங்கு திரையுலம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் சார்பில் நன்றி. பசிவாடி பிராணம் (1987) என்ற படத்துடன் இந்தப் பட்டியலில் இப்படமும் சேர்ந்துள்ளது" என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
படம் தெலுங்கு மற்றும் தமிழ், ஹிந்தி போன்ற பிற மொழிகளில் வெளியானபோது, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
2017 இல் வெளியான 'பாகுபலி 2' 1810 கோடி ரூபாய் அளவிலான உலகளாவிய வசூலைப் பெற்றது. முதல் படமான 'பாகுபலி: தி பிகினிங்' 2015 இல் வெளியாகி 685 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்தது.
நடிகைகள் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய நடிகைகளும் இதில் நடித்துள்ளனர்.
ரஷ்ய தூதரகத்தின் ட்வீட்டிற்கு பின்னூட்டம் அளித்த ஒரு ரசிகர், "ரஷ்ய மொழியில் பாடல் எவ்வாறு பாடப்படும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.. பாடல் அல்லது பின்னணி பாடல் கொண்ட அந்த வீடியோவை பதிவேற்றவும்." என்று கேட்டிருந்தார்.
இதற்கு தூதரகம், "பாடல்கள் இருக்கும் இடங்களில் சப்-டட்டில்கள் இடம்பெறும்” என பதிலளித்துள்ளது.
பெரும்பாலான பயனர்கள் இதை இந்தியாவும் ரஷ்யாவும் பாரம்பரியமாக பகிர்ந்து கொண்ட வலுவான பிணைப்பின் அடையாளம் என்று பாராட்டினர். சிலர் சோவியத் ஒன்றியமாக இருந்த நாட்களிலும் இந்திய திரைப்படங்களும் திரைப்பட நட்சத்திரங்களும் ரஷ்யாவில் பெற்ற ஆதரவை சுட்டிக்காட்டினர்.
கடந்த காலத்தில் ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய நட்சத்திரங்களில் ராஜ் கபூர் மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் அடங்குவர்.
(மொழியாக்கம்: லீமா ரோஸ்)