பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அஜித்-பிரபல தயாரிப்பாளரின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்..!

Manickam Narayanan on Ajith Kumar: நடிகர் அஜித்குமார் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல இயக்குநர் ஒருவர் குற்றச்சாட்டினை எழுப்பியுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 11, 2023, 05:44 PM IST
  • அஜித்குமார் அடுத்து விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
  • பிரபல தயரிப்பாளர் ஒருவர் அஜித் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அஜித்-பிரபல தயாரிப்பாளரின் ‘பகீர்’ ஸ்டேட்மெண்ட்..! title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் முதன்மையானவர் அஜித்குமார். ‘அமராவதி’ படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜித், இன்று தனது ‘விடாமுயற்சி’யால் கோலிவுட்டின் உச்சம் தாெட்ட நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர், பிரபல தயாரிப்பாளர் ஒருவரிம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றசச்சாட்டு எழுந்துள்ளது. 

அஜித்குமார்:

நடிகர் அஜித்குமார், 90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவை ஆட்சி புரிந்து வரும் பெரும் நடிகராக உள்ளார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, நெகடிவ் ஷேட் நாயகன் என பல அவதாரங்கள் எடுத்த இவர், கடைசியாக நடித்த படம் துணிவு. கடந்த ஜனவரி மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மகிஷ் திருமேனி இயக்குகிறார். நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றது. 

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட மிஷ்கின்-'மாவீரன்’ பட வில்லன் கூறியது என்ன?

தயாரிப்பாளரை ஏமாற்றிய அஜித்குமார்? 

கமல் நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம், ‘வேட்டையாடு விளையாடு’. உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்து வழங்கியிருந்தார். இந்த திரைப்படம், பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை படக்குழுவினர் சேர்ந்து கொண்டாடினர். இதுகுறித்த ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் மாணிக்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் நடிகர் அஜித் குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறினார். 

பணம் வாங்கிய அஜித்..

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்ட நேர்காணலில் பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் அஜித்குமார் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து காெண்டார். அப்போது பேசிய அவர், அஜித்குமார் சில ஆண்டுகளுக்கு தன்னிடம் குடும்பத்தினரை மலேசியாவிற்கு சுற்றுலா அழைத்து செல்வதற்காக தன்னிடம் பணம் கேட்டு வாங்கியதாக அவர் தெரிவித்தார். 

“பணத்தை திருப்பி தரவில்லை..”

அஜித்குமார் பணம் வாங்கிய செய்தியை சொன்ன மாணிக்கம் நாராயணம், அந்த பணத்தை அவர் இன்றுவரை தனக்கு திருப்பி தரவில்லை என்றும் தெரிவித்தார். பணத்தை வாங்கும் போது தன் படம் ஒன்றில் நடித்து தருவதாக அஜித் கூறியதாகவும் ஆனால் இன்று வரை அவர் தன் படம் எதிலும் நடிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், அந்த பணத்தை பற்றி அவர் இதுவரை பேசியது கூட இல்லை என்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். அஜித் ஒரு ஜென்டில்மேன் என அனைவரும் நினைப்பதாகவும் ஆனால் அவர் உண்மையில் அப்படிப்பட்டவர் இல்லை எனவும் அந்த தயாரிப்பாளர் அஜித் குறித்து கூறியுள்ளார். 

அஜித்தின் குணத்தை விரும்பும் ரசிகர்கள்..

நடிகர் அஜித்குமார் கடந்த சில ஆண்டுகளாக பட நிகழ்சிகளில் கலந்து கொள்வது, பொது வெளியில் முகம் காட்டுவது என எதையும் செய்யாமல் இருக்கிறார். ‘அமைதியின் மறு உருவம் அஜித்’ என்று கூட சிலர் பேசுவதுண்டு. இவருக்கென்று இதுவரை சமூக வலைதளங்கில் அதிகாரப்பூர்வ கணக்கு கிடையாது. தனது குடும்பம் குறித்த விஷயங்களை கூட அஜித் எங்கும் பேசியதில்லை. சமீபத்தில் பைக்கிலேயே தனது இந்தியா டூரையும் அஜித் முடித்தார். நடிப்பு நடிப்பு என்று மட்டுமன்றி,  தன் குடும்பத்திற்காகவும் தனக்காகவும் நேரம் ஒதுக்கும் அஜித்தின் குணாதிசியம் பலருக்கும் பிடித்திருந்தது. இதுவரை, அவர் நடிப்பை குறை கூறினாலும யாருமே அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறவில்லை. தற்போது ஒரு பிரபல தயாரிப்பாளர் இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | Fact Check: இளம் நடிகரை திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News