திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி - உதயநிதிக்கு வாழ்த்து

திருப்பதியில் குடும்பத்துடன் தரிசனம் செய்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதற்கு வாழ்த்து தெரிவித்தார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 15, 2022, 11:51 AM IST
  • ரஜினிகாந்த் திருப்பதி சென்றார்
  • அங்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
  • உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார்
திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி - உதயநிதிக்கு வாழ்த்து title=

திமுக எம்.எல்.ஏவும், முதலமைச்சர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்துவைத்தார். நண்பர் என்ற முறையில் அன்பில் அவ்வாறு பேசினார் என பலர் கூறினர். இதனையடுத்து திமுகவின் சூப்பர் சீனியரான ஐ.பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்திலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது திமுகவின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்தது.

ஆனால் ஏற்கனவே வாரிசு அரசியல் என்று பெயர் எடுத்திருக்கும் திமுக; உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் அந்த வாரிசு அரசியல் பட்டம் வலுப்பெறக்கூடும் என ஸ்டாலின் உதயநிதிக்கான அமைச்சர பட்டாபிஷேகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. ஆளுநர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் உதயநிதி அமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உதயநிதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இதேபோல் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்திலும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 12ஆம் தேதி ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரது ரசிகர்கள் ரஜினியின் இல்லம் முன்பு குவிந்தனர். அப்போது அவர் ஊரில் இல்லாததால் ரசிகர்களை அவரால் சந்திக்க முடியவில்லை என கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | மீண்டும் வருமா புயல்?... இன்று வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News