ராஷ்மிகா மற்றும் ஜிவிபிரகாஷ் இணையும் புதிய படம்! பூஜையுடன் தொடக்கம்!

நிதின், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'VNR Trio' படத்தின் முதல் காட்சியை தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 26, 2023, 10:42 AM IST
  • VNR Trio' படத்தில் வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா நடிக்கின்றனர்.
  • படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
  • மார்ச் 24ம் தேதியன்று பூஜையுடன் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது.
ராஷ்மிகா மற்றும் ஜிவிபிரகாஷ் இணையும் புதிய படம்! பூஜையுடன் தொடக்கம்!

பொதுவாக ஒரு வெற்றிக்கூட்டணி மீண்டும் ஒரு படத்தின் மூலம் இணையும்போது அது அனைவரிடையேயும் பெரியளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும்.  அதேபோல ஒரே படத்தில் பெரிய நட்சத்திரங்கள் பலரும் இணையப்போகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம், படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படம் வெளியாகும் வரை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள்.  அந்த வகையில் தற்போது மூன்று பெரிய நட்சத்திரங்களின் வலுவான கூட்டணி ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.  வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்துள்ளனர், இப்படத்திற்கு 'VNR Trio' என்று தாற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.  கடந்த 2020-ம் ஆண்டில் வெளியான பீஷ்மா எனும் மெகா ஹிட் படத்தின் மூலம் இணைந்திருந்த இந்த கூட்டணி தற்போது 'விஎன்ஆர் ட்ரியோ' மூலம் மீண்டும் கலக்க வருகிறது.

மேலும் படிக்க | விஜய்யை பின்தொடரும் சிவகார்த்திகேயன்! இந்த விசயத்திலுமா?

'VNR Trio' படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மார்ச் 22-ம் தேதி ஒரு சுவாரஸ்யமான வீடியோவுடன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலானது.  இப்படத்திற்கான பணிகள் மார்ச் 24ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது, அதாவது தெலுங்கு மக்களின் புனித நாளான தெலுங்கு வருடப்பிறப்பு அன்று படத்தின் பூஜை நடத்தப்பட்டது.  இந்த பட பூஜை நிகழ்ச்சியில் மெகாஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இன்னும் பிற தெலுங்கு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இயக்குநர் பாபி கேமராவை சுவிட்ச் ஆன் செய்தார்.  கோபிசந்த் மலினேனி முதல் காட்சியை இயக்கினார், ஹனு ராகவபுடி மற்றும் புச்சிபாபு சனா ஆகியோர் ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.  இப்படத்தின் எடிட்டராக பிரவின் புடியும், கலை இயக்குனராக ராம் குமாரும் பணியாற்றுகின்றனர்.  படத்தின் ஒளிப்பதிவு பணியை சாய் ஸ்ரீராம் மேற்கொள்கிறார், இப்படத்தில் நிதின், ராஜேந்திர பிரசாத், ராஷ்மிகா, வெண்ணிலா கிஷோர் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படம் பற்றிய கூடுதல் தகவல்களை படக்குழுவினர் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடுவார்கள்.

மேலும் படிக்க | சிறுத்தை படத்தில் நடித்த சின்ன பெண்ணா இது... டீன்ஏஜ் போட்டோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News