‘ஊ அண்டாவா..’ பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட சமந்தா-வைரல் வீடியோ..!

Samantha: பிரபல நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் சிட்டடெல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் “ஊ அண்டாவா..” பாடலுக்கு ஆடிய வீடியாே வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 11, 2023, 04:13 PM IST
  • சமந்தா சிட்டடெல் எனும் தொடரில் நடித்து வருகிறார்.
  • படக்குழுவினருடன் செர்பியாவிற்கு சென்றுள்ளார்
  • அங்குள்ள ஒரு பப்பில் ஊ அண்டாவா பாடலுக்கு ஆடியுள்ளார்.
‘ஊ அண்டாவா..’ பாடலுக்கு பாலிவுட் நடிகருடன் குத்தாட்டம் போட்ட சமந்தா-வைரல் வீடியோ..! title=

கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, இப்போது பாலிவுட் பக்கமும் கொடிகட்டி பரக்கிறார். தற்போது அவர், பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவானுடன் சேர்ந்து சிட்டெல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்த வேலைகளுக்காக படக்குழு செர்பியாவிற்கு சென்றுள்ளது. இதையடுத்து, சமந்தாவும் வருண் தவானும் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

செர்பியா சென்ற சமந்தா..

கடந்த 2021ஆம் அண்டு வெளியாகியிருந்த புஷ்பா படத்தில், “ஊ அண்டாவா..” பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலில், நடிகை சமந்தா அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். பாட்டு ஹிட் ஆகி பல நாட்களானாலும், இதை எங்கு கேட்டாலும் கிரக்கமாக உள்ளதாக சிலர் கூறுகின்றனர். தற்போது சிட்டெல் தொடரில் நடித்துள்ள சமந்தா, இந்த தாெடருக்கான வேலையாக, செர்பியா வரை படக்குழுவுடன் சென்றுள்ளார். இவருடன், வருண் தவான் மற்றும் படத்தின் தயாரிப்பாளரகள் குழு என அனைவரும் சென்றுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் படக்குழுவினருக்காக அந்நாட்டில் உள்ள ஒரு பப்பில் பார்டி நடந்துள்ளது. இதில், சிட்டடெல் குழுவினர் கலந்து கொண்டு மகிழ்சியாக பொழுதினை கழித்துள்ளனர். 

மேலும் படிக்க | ப்ரேக் எடுப்பதாக கூறி பலரையும் ஏமாற்றிய பிரபல நடிகை..செம கடுப்பில் ரசிகர்கள்..!

ஊ அண்டாவா பாடலுக்கு குத்தாட்டம்..

சிட்டடெல் குழுவின் பார்டியை ஒட்டி, அதில் பல பாடல்கள் போட்டு படக்குழுவினர் நடனமாடியுள்ளார். அப்போது திடீரென்று “ஊ அண்டாவா” பாடலை அந்த பார்ட்டியின் டிஜே ப்ளே செய்ய, அனைவரும் சமந்தாவை நோக்கி ஊ…ஊ என நடனமாடும் படி உற்சாகப்படுத்தினர். ஆரம்பத்தில் ஆட தயங்கிய சமந்தாவை, அவருக்கு மேல் படியில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆட சொல்லி உற்சாகப்படுத்தினர். அவர்களுள், சிட்டடெல் ஹீரோ வருண் தவானும் ஒருவர். பிறகு சமந்தா ஊ அண்டாவா பீட்டிற்கு இரண்டு நடன அசைவுகளை காண்பிக்க வருண் தவானும் பின்னாள் இருந்தவாறு வைப் செய்தார். இந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

பிரியங்கா சோப்ராவின் தாெடர்…

சிட்டடெல் தொடரின் வெளிநாட்டு வர்ஷனில், நடிகை பிரியங்கா சோப்ரா சீக்ரட் ஏஜண்டாக நடித்திருந்தார். அவருடன் ரிச்சர்ட் மேடன், ஸ்டான்லி டக்கி போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த தொடரின் இந்திய வர்ஷனில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார், வருண் தவான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். 

லைன் கட்டி நிற்கும் சமந்தாவின் படங்கள்..

நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளர்களால் அதிகம் தேடப்படும் நாயகிகளுள் ஒருவராகிவிட்டார். அடிக்கடி சாகுந்தலம், யசோதா பாேன்ற படங்கள் மூலம் ஃப்ளாப் கொடுத்தாலும் அவருக்கான மார்கெட்டை நன்றாகவே தாக்கு பிடித்து வைத்திருக்கிறார் சமந்தா. இதனால்தான், பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பல இயக்குநர்கள் இவரை தன் படத்தில் நடிக்க அழைக்கின்றனர். அடுத்து, ஹாலிவுட் இயக்குநர் ஒருவரின் படத்தில் சென்னை பெண்ணாக நடிக்கிறார் சமந்தா. அது மட்டுமல்ல, இந்த படத்தில் அவர் இருபால் ஈர்ப்பு கொண்ட தமிழ் பெண்ணாக வருகிறார். சிட்டடெல், சென்னை ஸ்டோரி ஆகிய படங்களை முடித்து விட்டு சமந்தா சில நாட்கள் ரெஸ்ட் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க | 13 வயது சிறுமியை கற்பழித்த பிரபல பாடகர்..போட்டோ பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News