விஜய்யுடன் வேலை செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டியுள்ளார் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 10ம் தேதி நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதை நிருத்திவிடுகின்றனர். இதனால் சமந்தாவும் நடிப்பாரா என்ற கேளிவுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
திருமணம் ஆனா என்ன நடிக்க கூடாதா. உண்மையில் என்னை புரிந்து கொண்ட குடும்பம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் தொடர்ந்து நான் நடிப்பேன். விஜய்யுடன் 3வது முறையாக வேலை செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடன் வேலை செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதனால் தான் அவர் இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டியுள்ளார்.
இவ்வாறு கூறியுள்ளார் நடிகை சமந்தா.