சீதா ராமன் அப்டேட்: வீடியோவை காட்டி மிரட்டும் மகா.. மீரா எடுத்த முடிவு

Seetha Raman Today's Episode Update: வீடியோவை காட்டி மிரட்டும் மகா.. மீரா எடுத்த முடிவு, சீதா செய்ய போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 11, 2023, 12:35 PM IST
  • சத்யனிடம் மன்னிப்பு கேட்கும் மீரா.
  • கல்யாணம் கண்டிப்பா நடக்கும்: சவால் விடும் சீதா.
  • மீராவை பிளாக்மெய்ல் செய்யும் மகா.
சீதா ராமன் அப்டேட்: வீடியோவை காட்டி மிரட்டும் மகா.. மீரா எடுத்த முடிவு title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் மீரா தற்கொலை செய்து கொள்ள ஹாஸ்பிடலில் மொட்டை மாடிக்கு ஓடி சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சத்யனிடம் மன்னிப்பு கேடட்கும் மீரா

அதாவது மீரா மொட்டை மாடிக்கு சென்ற நிலையில் சீதா ராம் என எல்லாரும் மீராவை தேட பிறகு மீரா தற்கொலை செய்து கொள்ள மொட்டை மாடியில் இருப்பது தெரிய வர சீதா ராம் என எல்லாரும் சேர்ந்து மீராவை காப்பாற்றுகிறார்கள்.

மீராவை கீழே இறக்கி கொண்டு வந்து சமாதானம் செய்ய மீரா சத்யனிடம் மன்னிப்பு கேட்கிறாள். 

அதனை தொடர்ந்து ராம் சீதா வீட்டிற்கு வர இங்கே மகா கேங்க் முந்திரி அல்வா சாப்பிட்டு இந்த விஷயத்தை கொண்டாட இதை பார்த்த ராம் கோபப்பட்டு அவர்களை திட்டுகிறான். இதெல்லாம் பண்ணது நீங்க தான் தெரிஞ்சா அவ்வளவு தான் என்று வார்னிங் கொடுக்க மகா அது கடவுள் கொடுத்தது என்று சொல்ல கடவுள் செய்ததா நீங்க செய்ததானு தெரியட்டும் அப்புறம் இருக்கு என்று உள்ளே சென்று விடுகிறான். 

கல்யாணம் கண்டிப்பா நடக்கும்: சவால் விடும் சீதா

பிறகு சீதா அவருக்கு டவுட் தான் எனக்கு இருக்கு, எனக்கு நல்லாவே தெரியும் இது பண்ணது நீங்க தான் என்று சொல்லி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும், நான் நடத்தி வைப்பேன் என்று சவால் விட்டு உள்ளே செல்ல இவர்கள் கிளம்பி ஹாஸ்பிடல் வருகின்றனர். மீராவை ஹாஸ்பிடலில் வைத்து சந்திக்கும் மகா அந்த சத்யனை கடவுளோ டாக்டரோ நினைத்தால் எல்லாம் காப்பாற்ற முடியாது, நான் தான் இப்போ கடவுள். நான் நினைத்த தான் காப்பாற்ற முடியும் என்று சொல்லி அச்சிடேன்ட் செய்த வீடியோவை காட்ட மீரா அதிர்ச்சி அடைகிறாள். 

மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீராவை பிளாக்மெய்ல் செய்யும் மகா

நீ இந்த விஷாலை கல்யாணம் பண்ணிக்க இப்பவே சம்மதம் சொன்னா சத்யன் உயிர் பிழைப்பான் என்று சொல்ல மீரா வேறு வழியின்றி கல்யாணத்திற்கு சம்மதிக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | கேப்டன் அமெரிக்காவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா..? 26 வயது இளம் நடிகையை கரம் பிடித்த கிறிஸ் எவான்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News