‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Thalaivar 171: ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 11, 2023, 11:52 AM IST
  • தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
  • படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்.
‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்தை லோக்கேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தலைவர் 171:

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. 

இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், அனிருத் ரவிசந்தர் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் மாஸ்டர், கைதி, விக்ரம் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த அன்பரிவு ‘தலைவர் 171’ படத்திற்கும் சண்டை கலைஞராக பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | கேப்டன் அமெரிக்காவிற்கு கல்யாணம் ஆயிடுச்சா..? 26 வயது இளம் நடிகையை கரம் பிடித்த கிறிஸ் எவான்ஸ்!

இளம் இயக்குநர்களுடன் கைக்கோர்க்கும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த், சமீப காலமாக இளம் இயக்குநர்களுடன் கைக்கோர்த்து வருகிறார். கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இவர் அந்த படத்தை இயக்குவதற்கு முன்பு வெகு சில படங்களையே டைரக்டு செய்திருந்தாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்தார் ரஜினி. தற்போது அதே போல, இன்னொரு இளம் இயக்குநரான லோக்கேஷ் கனகராஜ்ஜுடன் கைக்கோர்த்துள்ளார். ஆரம்பத்தில் தனக்கு செட் ஆன இயக்குநர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து வந்த ரஜினிகாந்த் தற்போது வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கும் தன் படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

லோகேஷ் சம்பவம் லோடிங்க்!

கோலிவுட் சினிமாவில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும் ரசிகர்கள் மனங்களில் நல்ல இயக்குநர் என்ற இடத்தை பிடித்திருப்பவர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்து கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கியிருந்த படம், மாஸ்டர். இப்படம் “எதிர்பார்த்த அளவிற்கு இல்லை..” என்ற விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து அவர் இயக்கியிருந்த ‘விக்ரம்’ படத்திலும் தனக்கு பிடித்த நடிகரான கமலை வைத்து சம்பவம் செய்தார். இதையடுத்து பான் இந்தியா அளவிற்கு லோகேஷ் கனகராஜ்ஜின் தரம் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வந்தனர். இந்த நிலையில், இவர் தற்போது ரஜினிகாந்தை இன்னொரு சம்பவம் செய்ய உள்ளதாக கூறி சில ரசிகர்கள் X தளத்தில் பதிவிட்டு உள்ளனர். 

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது...?

தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சில பான் இந்திய நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திரையுலகிற்கு வந்து சில ஆண்டுகளிலேயே கமல், ரஜினி வரை தொட்டு விட்ட லோகேஷ் 10 படங்களை மட்டுமே இயக்க திட்டமிட்டு உள்ளதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மறக்கவே முடியாத ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி.. கடும் கோபத்தில் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News