ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு வெளியிடப்பட்டது...

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் விளம்பர பணிகளுக்கு உதவும் என தெரிகிறது.

Last Updated : Nov 25, 2019, 11:38 AM IST
  • நிஜ உலகில் இருப்பவரை மாய உலகிற்கு அழைத்துச்செல்வது வர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், நிஜ உலகத்திலேயே மாய உலகத்தை இணைப்பதுதான் ஆக்மெண்டட் ரியாலிட்டி. இந்த தொழில்நுட்பத்தில் வெளியான போக்கிமான் கோ கேம் உலக அளவில் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு வெளியிடப்பட்டது... title=

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக ப்ரத்தியேக விளையாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளையாட்டு படத்தின் விளம்பர பணிகளுக்கு உதவும் என தெரிகிறது.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக ஆக்மெண்டட் ரியாலிட்டி ‘ஹீரோ’ மொபைல் விளையாட்டு ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். 

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் தற்போது ஹீரோ கேம் கிடைக்கும் என்றும், IOS இயங்குதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த விளையாட்டை ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் விளையாடியும், அதில் வெற்றி பெற்றதை புகைப்படங்களாக பதிவிட்டும் வருகின்றனர்.

நிஜ உலகில் இருப்பவரை மாய உலகிற்கு அழைத்துச்செல்வது வர்ச்சுவல் ரியாலிட்டி என்றால், நிஜ உலகத்திலேயே மாய உலகத்தை இணைப்பதுதான் ஆக்மெண்டட் ரியாலிட்டி. இந்த தொழில்நுட்பத்தில் வெளியான போக்கிமான் கோ கேம் உலக அளவில் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

Trending News